ஆண்களே.. நீங்கள் செய்யும் இந்த தவறு, உங்களுக்கு வயதான தோற்றத்தை தரும்..
பொதுவாக சரும பராமரிப்பு என்றால் அது பெண்களுக்கு மட்டும் தான் என்று பல ஆண்கள் நினைப்பது உண்டு. பல ஆண்கள் இன்றும் தங்கள் வேலையின் காரணமாக முகத்தை சரியாக கழுவுவது கூட இல்லை. இதனால் 30 வயதிலேயே முதுமை சுருக்கங்கள் வருகிறது. இதற்க்கு முக்கிய காரணம் ஷேவிங் செய்யும் முறை தான். ஆம், இன்றும் பல ஆண்களுக்கு சரியான முறையில் எப்படி ஷேவ் செய்ய வேண்டும் என்று தெரிவதில்லை. இதனால் ஷேவிங் செய்வதற்கு முன் ஆண்கள் செய்யும் சில தவறு என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..
பெரும்பாலான ஆண்கள் தாடியை ஷேவ் செய்வதற்கு சோப்பு அல்லது நுரை கொண்ட க்ரீமை பயன்படுத்துவது உண்டு. இது தான் ஷேவிங் செய்வதற்கு முன் ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. இந்த தவறை மீண்டும் மீண்டும் செய்வதால், தோலின் கீழ் உள்ள கொலாஜன் மற்றும் புரதம் வறண்டு போய் சருமம் பாதிக்கப்படும். மேலும், தாடி காலப்போக்கில் மிகவும் கரடுமுரடானதாக மாறி உங்கள் முகத்தின் அழகை கெடுத்துவிடும். இதனால் தான் பல ஆண்கள் முதிர்ச்சி அடையும் முன்பே வயதானவர்களாகத் தெரிகிறார்கள். இதற்க்கு பதிலாக கடைகளில் கிடைக்கும் மென்மையான கிளென்சிங் கிரீம்கள் அல்லது திரவங்கள் பயன்படுத்தலாம்.
அடுத்து, எதிர் திசையில் ஷேவிங் செய்வது. இது தான் ஷேவிங் செய்யும் போது ஆண்கள் செய்யும் மற்றொரு பெரிய தவறு. எப்போதும் தாடி முடியின் நேரான பகுதிக்கு எதிர் திசையில் ஷேவிங் செய்வது மிகவும் தவறு. தலைமுடியைப் போலவே தாடியையும் ஷேவ் செய்வது தான் சிறந்தது. தாடியை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டாம். அதற்க்கு பதில் வெதுவெதுப்பான நீரை பயன்படுத்துவது சிறந்தது. தாடியை ஷேவ் செய்யும் போது, தாடி மென்மையாக மாறும் வரை 5 நிமிடம் தண்ணீர் கொண்டு தேய்க்க வேண்டும். இதனால் அந்த இடத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து முடி மென்மையாக மாறும். அதேபோல், ஒரு நல்ல மாய்ஸ்சரைசரை நீங்கள் பயன்படுத்துவதால் உங்கள் சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கலாம்.
Read more: இளம்பெண்ணின் “அந்த பகுதியை” நடுரோட்டில் வைத்து பிடித்த 10 வயது சிறுவன்; வெளியான அதிர்ச்சி வீடியோ..