திருமண வரன் தேடும் ஆண்களே உஷார்..!! காவல்துறையை கூட விட்டு வைக்கல..!! இவர்கள் தான் குறியாம்..!!
கேரள மாநிலத்தில் சுருதி (35) என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு, சமீபத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில், அவருடைய கணவர் தற்போது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், ஸ்ருதி பல ஆண்களை திருமணம் என்ற பெயரில் ஏமாற்றி பணம் மற்றும் நகை பறித்துள்ளதாக தெரிவித்துள்ளார். திருமண மேட்ரிமோனி மூலம் வரன் தேடும் பணக்கார ஆண்களை குறிவைத்து அவர்களுக்கு திருமண ஆசையை தூண்டியுள்ளார்.
அவர்களை திருமணம் செய்த பிறகு பணம் மற்றும் நகை போன்றவற்றை பறித்து விட்டு அவர்களை பிரிந்துச் சென்று விடுகிறார். இது போன்று அவர் பல ஆண்களை ஏமாற்றியுள்ளார். அவர் போலீஸ் உயர் அதிகாரி முதல் சாமானிய இளைஞர்கள் வரை ஏமாற்றியுள்ளார். குறிப்பாக கேரளாவைச் சேர்ந்த எஸ்-ஐ ஒருவரும் இவர் வலையில் சிக்கியுள்ளார். இவரிடமிருந்து ரூ.5 லட்சம் வரை பணம் பறித்துள்ளார். அதோடு அவர் தன்னை பலாத்காரம் செய்ததாக ஸ்ருதி புகார் கொடுத்ததால் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து, மேட்ரிமோனியல் வலைதளங்களில் தான் ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் வருமான வரித்துறை அதிகாரி என்று பலவிதமாக கூறி மோசடி செய்து வந்துள்ளார். இதற்கிடையே, சிறையில் இருந்து வெளியே வந்த எஸ்ஐ சம்பந்தப்பட்ட இளைஞரிடம் நடந்த விஷயங்களை கூறியுள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் தன் மனைவி மீது போலீசில் புகாரளித்துள்ளார். மேலும் அந்த புகாரின் படி, காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் மேற்கண்ட அதிர்ச்சி விவரங்கள் தெரியவந்துள்ளது.