முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆண்களே..!! இந்த பழக்கத்தை எல்லாம் மாற்றிக் கொள்ளுங்கள்..!! இல்லையென்றால் என்ன ஆகும் தெரியுமா..?

Weight gain has become normal due to the chemicals in the foods we consume every day.
05:20 AM Dec 12, 2024 IST | Chella
Advertisement

உலக அளவில் இதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதய ஆரோக்கியத்திற்கு ஆண்கள் தங்களுடைய உணவில் ஊட்டச்சத்துக்களும் புரதங்களும் நிறைந்துள்ள உணவு பழக்கத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மாரடைப்பு போன்ற இதய கோளாறுகளால் இளைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது.

Advertisement

இந்த காரணங்களினால் ஒவ்வொருவரும் தங்களது இதயத்தின் நலனில் அதிக அக்கறை செலுத்துவது இன்றியமையாததாக மாறியுள்ளது. சீரான கால இடைவெளியில் ரத்த அழுத்த பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை, புகையிலை பழக்கத்தை நிறுத்துதல், குறைந்த கொழுப்பு உணவுகளை உட்கொள்வது போன்ற வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இதய நோய் ஏற்படும் வாய்ப்பை கணிசமாக குறைக்கலாம்.

அந்த வகையில், 20 வயதுக்குட்பட்ட நான்கில் ஒரு ஆண் உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. 75 வயதை நெருங்கியுள்ள 75 சதவீத ஆண்களுக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், பொதுவாக உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு அதன் அறிகுறிகள் ஏதும் வெளிப்படையாக தெரிவதில்லை. மேலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதும் எந்தவித அறிகுறிகளும் இல்லாமலே நிகழ்கிறது. ஒருவர் அதிக அளவு உடல் எடை கூடும்போது கட்டாயம் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவுக்கான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

மேலும் கொழுப்பு மற்றும் ப்ரோஸ்டேட் புற்றுநோய்க்கான சோதனைகளையும் ஒவ்வொரு ஆணும் செய்து கொள்வது அவசியமாக உள்ளது. புகைப்பிடிப்பது நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தி இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களையும் பாதிக்கிறது. மேலும், உடலில் அங்கங்கு ரத்தம் உறைதலையும் ஏற்படுத்துகிறது. அதேபோல மதுப்பழக்கத்தையும் கட்டாயம் நிறுத்த வேண்டும். உடனடியாக நிறுத்த முடியவில்லை எனில் வாரத்திற்கு ஒரு முறை என்ற அளவில் குறைத்துக் கொள்ள முயற்சிக்கவும்.வாழ்க்கை முறையிலும், மனதளவிலும் மாற்றத்தை ஏற்படுத்தி பல்வேறு வித உடல் உபாதைகளை உண்டாக்கும். கிடைத்த ஆய்வுகளின் படி அதிக அளவு மன அழுத்தத்தில் உள்ள ஆண்களுக்கு இதய பாதிப்பும் உண்டாகும் வாய்ப்புகள் மிக அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்களில் உள்ள வேதிப்பொருட்களினால் உடல் எடை கூடுதல் என்பது இயல்பாகி விட்டது. ஆனால், இந்த உடல் எடை கூடுவது தான் உடலில் பல்வேறு உபாதைகளுக்கும் காரணமாக இருக்கிறது. ஆண்கள் தங்களுடைய உணவில் ஊட்டச்சத்துக்களும் புரதங்களும் நிறைந்துள்ளவாறு உணவு பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். மேலும், உடலுக்கு கெடுதல் தரும் ஆரோக்கியமற்ற உணவு பொருட்களுக்கு பதிலாக, காய்கறிகள், பழங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். நன்றாக உறங்கும்போது உடல் எடை குறைவதில்லை. ஆனால், அதிகப்படியான உடலுக்கு கெடுதல் செய்யும் கொழுப்புகள் மூலம் உடல் எடை கூடுவது தடுக்கப்படுகிறது. மேலும், 7 முதல் 9 மணி நேரம் தூங்குபவர்கள் மிகவும் உற்சாகமாகவும் அதிக சக்தியுடனும் செயல்பட உதவுகிறது.

Read More : ”இப்போது தேர்தல் வைத்தாலும் எடப்பாடியார் CM ஆவார்”..!! ”அவர் பேச்சில் சட்டப்பேரவையே ஆடிப்போய்விட்டது”..!! மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்..!!

Tags :
ஆண்கள்உடல் ஆரோக்கியம்உணவு வகைகள்
Advertisement
Next Article