For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Memorial | கலைஞர் நினைவிடம் திறப்பு..!! எதிர்க்கட்சி உட்பட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த முதல்வர்..!!

10:55 AM Feb 22, 2024 IST | 1newsnationuser6
memorial   கலைஞர் நினைவிடம் திறப்பு     எதிர்க்கட்சி உட்பட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த முதல்வர்
Advertisement

கலைஞர் நினைவிடம் 26ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement

கலைஞர் நினைவிடத்தில் கட்டுமான பணிகள் முடிவடைந்து விட்டதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. மேலும், வரும் 26ஆம் தேதி கலைஞர் நினைவிட திறப்பு விழாவுக்கு பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். கலைஞர் நினைவிடத்தில் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும் பேரவையில் முதலமைச்சர் பேசினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், ”முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் வரும் 26ஆம் தேதி இரவு 7 மணிக்கு திறக்கப்படுகிறது. புதுப்பிக்கப்பட்டுள்ள அண்ணா நினைவிடமும், வரும் 26ஆம் தேதி மாலை திறக்கப்படும். நின்ற தொகுதிகளில் எல்லாம் வென்ற தலைவன் நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய தலைவன் கலைஞர். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணி கட்சி, தோழமைக் கட்சி உட்பட எல்லா கட்சி உறுப்பினர்களும் வரவேண்டும் என சபாநாயகர் மூலம் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.

Read More : Vijay TVK | 2026 முதல்வர் பதவி உறுதி..? நடிகர் விஜய் கட்சிக்கு அரசியல் ஆலோசகராகும் பிரஷாந்த் கிஷோர்..!!

Advertisement