மீம்ஸ் உலகின் புகழ் பெற்ற "கபோசு" நாய் உயிரிழப்பு..! நெட்டிசன்கள் வருத்தம்..!
kabosu dog : மீம்ஸ் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான ‘கபோசு’ நாய் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. கபோசுவின் மறைவுக்கு உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் தங்களுடடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த நாயை ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். அப்போது, 2010 ஆம் ஆண்டு கபோசு நாயை வைத்து விதவிதமாக போட்டோ ஷூட் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது. இந்தப் புகைப்படம் இணையதளவாசிகளை வெகுவாக கவர்ந்தது மட்டுமல்லாமல், அந்தக் கபோசு நாயின் ரியாக்ஸன்கள் அனைத்தும் உலகம் முழுவதும் மீம் டெம்ப்லேட்டுகளாக மாறி பலரையும் ரசிக்கும்படி வைத்தது.
அந்த அளவுக்கு பல ரியாக்சன்களை கொடுத்து நம்மை வியப்பில் ஆழ்த்தும். இந்நிலையில் கபோசு நாய் வெள்ளிக்கிழமை காலை 7:50 மணியளவில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தது. 18 வயதான கபோசு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கபேசு-வின் உரிமையாளர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வழக்கம் போல நேற்று இரவு சாப்பாடு சாப்பிட்டுவிட்டு தூங்குச் சென்ற கபோசு தூக்கத்திலேயே உலகத்தை விட்டு பிரிந்தது. உலகத்தில் அதிக அன்பை பெற்றுக்கொண்ட நாய் என்றால் அது கபோசு தான். அதைப்போல, அவளைப் பெற்ற மகிழ்ச்சியான நபர் நான் தான். இத்தனை வருடங்களாக கபோசுவை நேசித்ததற்காக உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி” எனப் பதிவிட்டுள்ளார். அதோடு, மே 26-ம் தேதி இறுதிச்சடங்கு நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கூட, எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்திய பிறகு அதன் குருவி லோகோவை மாற்றி கபோசுவின் புகைப்படத்தை வைத்தார். பின்னர்தான் ட்விட்டர் எக்ஸ் நிறுவனமாக மாறியதும் வேறு புகைப்படம் மாற்றியது குறிப்பிடத்தக்கது.
Read More: காசா பள்ளி மீது ட்ரோன் தாக்குதல்..! குழந்தைகள் உட்பட 10 பேர் பலி!!