கடலோரப் பகுதிகளில் வெள்ளம் வர முக்கிய காரணமே இதுதான்..!! அழிவு காலம் நெருங்கிருச்சு..!! எச்சரிக்கும் நாசா..!!
நம் பூமியை 70% நீர் சூழ்ந்துள்ளது. மனிதர்களால் உருவாக்கப்படும் கழிவுகளை உள்வாங்கி பூமி பாதுகாப்போடு இயங்குவதற்கு எந்த அளவுக்கு கடல் உதவி செய்கிறது என்று விஞ்ஞானிகள் சந்தேகித்து வருகின்றனர். நம் பூமியை கடல் சூழ்ந்ததற்கான காரணம், தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் பெருகிவிட்ட சூழலிலும் அதில் இருந்து வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்சைடு மூலமாக காற்று மாசடைவதோடு அதில் பூமியின் வெப்பத்தையும் அதிகரிக்கிறது.
இதனால் பல்லாயிரம் ஆண்டுகளாக உறைந்து கிடக்கும் பனிப்பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக உருகி வருவதாக கூறப்படுகிறது. இது பூமி கடலால் மூழ்கடிக்கப்படும் என்பதை எச்சரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கடந்த 1992ஆம் ஆண்டு கடல் மட்டத்தை அளவிடும் முறை தொடங்கிய நிலையில், அப்போதில் இருந்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 32 ஆண்டுகளில் கடலின் நீர்மட்டம் 10 சென்டிமீட்டர் வரை உயர்ந்துள்ளது.
கடலில் இருக்கும் பனிப்பாறைகள் உருகி நீர்மட்டம் உயர்வதோடு சூரிய வெப்பத்தால் கடல் நீர் விரிவடைந்து அதிக இடத்தை எடுத்துக் கொள்கிறது. இதுதான் அடிக்கடி கடலோரப் பகுதிகளில் வெள்ளம் வர முக்கிய காரணம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Read More : ஆப்பு வைக்கும் SBI வங்கியின் மெசேஜ்..!! லிங்கை கிளிக் செய்தால் பணம் அபேஸ்..!! சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை..!!