For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உருக்கம்!… என்ன நேர்ந்தாலும் இறுதி தருணம் வரை காஸாவில் மருத்துவ சேவை தடைபடாது!

02:15 PM Nov 12, 2023 IST | 1newsnationuser3
உருக்கம் … என்ன நேர்ந்தாலும் இறுதி தருணம் வரை காஸாவில் மருத்துவ சேவை தடைபடாது
Advertisement

எது நேர்ந்தாலும் இறுதி தருணம் வரை நோயாளிகளுக்கான மருத்துவ சேவை தடைப்படாது என காஸாவின் அல்-ஷிபா மருத்துவனை தெரிவித்துள்ளது.

Advertisement

இஸ்ரேல் மீது கடந்த அக். 7-ம் தேதி காஸா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக போர் அறிவிக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போரினால் இதுவரை (நவ.7) 10,328 பேர் பலியானதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில், 4,237 குழந்தைகளும் பலியாகி உள்ளனர்.

கடல், வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து தற்போது தரை வழியாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், காஸாவின் மருத்துவமனைகள், மசூதிகள், முகாம்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. காஸாவின் அல்-ஷிபா மருத்துவமனை அமைந்துள்ள பகுதியிலும், மருத்துவமனை வளாகத்திலும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நோயாளிகளும் மற்றும் மருத்துவ குழுவினர் தவிர்த்து 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மருத்துவமனையில் தஞ்சம் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து வெளியேறும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும், எந்நேரமும் இஸ்ரேலின் ட்ரோன்கள் அவர்களை கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நீர், உணவு, எரிபொருள் இல்லாத நிலையில், தற்போது மின்சாரமும் முற்றிலும் தடைப்பட்டுள்ளதால் இதுவரை 5 பேர் இறந்துள்ளதாகவும், இன்குபேட்டர்கள் இயங்காததால் ஒரு குழந்தை உயிரிழந்ததாகவும் மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும் இறப்பு இன்னும் சில நிமிடங்களில் இருப்பதாகவும், எது நேர்ந்தாலும் இறுதி தருணம் வரை நோயாளிகளுக்கான மருத்துவ சேவை தடைபடாது எனவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், ஹமாஸின் கட்டுபாட்டு அறையாகவும், புகலிடமாகவும் அல்-ஷிபா மருத்துவமனை செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டி இந்த தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது.

Tags :
Advertisement