For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மீண்டும் ’மீசை’ மீது பந்தயம் கட்டிய மீசை ராஜேந்திரன்..!! நடிகர் விஜய்யால் அது முடியவே முடியாது..!!

04:46 PM May 18, 2024 IST | Chella
மீண்டும் ’மீசை’ மீது பந்தயம் கட்டிய மீசை ராஜேந்திரன்     நடிகர் விஜய்யால் அது முடியவே முடியாது
Advertisement

காமெடி நடிகர் மீசை ராஜேந்திரன் 'ஜெயிலர்' படத்தின் வசூலை 'லியோ' முந்தாது என்று சவால் விட்டு, மீசையை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார். அதன்படி 'ஜெயிலர்' படத்தின் வசூலை 'லியோ' முந்தவில்லை என்பதும் அந்த எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது மீசை ராஜேந்திரன் ஊடகம் அளித்துள்ள பேட்டியில், ”விஜய் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் செய்ய இருப்பதாக கூறப்படுவது சாத்தியமா? என்ற கேள்விக்கு பதிலளித்தார்.

Advertisement

”எனக்கு தெரிந்து அவர் நடைபயணம் செய்ய சாத்தியமில்லை, விமான நிலையத்தில் அவர் நடந்து செல்லும்போதே அவர் மிகவும் சோர்வாக செல்கிறார். அவர், எப்படி தமிழகம் முழுவதும் நடைபயணம் செய்ய முடியும்? ஒருவேளை வாகனங்களில் வேண்டுமானால் பயணம் செய்ய வாய்ப்புள்ளது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பலர் விஜய் முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றுவிடுவார் என்றும் குறைந்தபட்சம் எதிர்க்கட்சி தலைவராகி விடுவார் என்று கூறி வருகின்றனர்.

ஆனால், அதற்கெல்லாம் சாத்தியம் இல்லை. ஒருவேளை 'ஜெயிலர்' படத்திற்கு சொன்ன மாதிரி நான் மீண்டும் சவால் விடுகிறேன். விஜய் கட்சி ஆரம்பித்து எதிர்க்கட்சி தலைவராக மாறினால் நான் மீசையை எடுத்துக் கொள்கிறேன் என்று சவால் விடுத்துள்ளார்.

Read More : உயிரைப் பறிக்கும் ’Non Stick’ பாத்திரங்கள்..!! உங்கள் வீட்டில் இருந்தால் உடனே தூக்கிப் போடுங்க..!! எச்சரிக்கும் ICMR..!!

Advertisement