அடி தூள்...! தமிழக அரசு சார்பில் மாவட்டம் தோறும் வருகிறது "மெகா ஸ்டோர்" திட்டம்...!
தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகமும், கூட்டுறவுத்துறையும் இணைந்து வீட்டிற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் விற்பனை செய்யும் வகையில் மாவட்ட வாரியாக 'மெகா ஸ்டோரை' திறக்க திட்டமிட்டுள்ளது.
கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் சங்கங்கள், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 300க்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடிகள் மற்றும் காய்கறி கடைகளை நடத்தி வருகின்றன. மேலும், உணவுத் துறையின் கீழ் இயங்கும் நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் அமுதம் பெயரில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறது. அதேபோல, தமிழகம் முழுவதும் பல்வேறு தனியார் நிறுவனங்கள், மளிகை, வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் விற்பனை செய்யும் வகையில் ஸ்டோர்களை இயங்கி வருகின்றன.
இந்த நிலையில் தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகமும், கூட்டுறவுத்துறையும் இணைந்து வீட்டிற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் விற்பனை செய்யும் வகையில் மாவட்ட வாரியாக 'மெகா ஸ்டோரை' திறக்க திட்டமிட்டுள்ளது. அதில், கூட்டுறவு சங்கங்களின் தயாரிப்புகள், மகளிர் சுய உதவிக்குழு தயாரிக்கும் பொருட்கள், மலைவாழ் மக்கள் தயாரிக்கும் பொருட்கள், மருந்துகள், விவசாயிகளிடம் இருந்து காய்கறி, பழங்கள் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.