இன்று தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்...! மொத்தம் 22 நாட்கள் 16 அமர்வுகள்...
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது, அரசு அலுவல்களுக்கு உட்பட்டு, கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12, 2024 திங்கட்கிழமை முடிவடையும். இந்த கூட்டத்தொடரில் 22 நாட்கள் 16 அமர்வுகள் நடைபெறும். இந்த அமர்வு முக்கியமாக 2024-25 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தொடர்பான நிதி கோரிக்கைகளுக்கு அர்ப்பணிக்கப்படும் என்றும், நாளை மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அத்தியாவசியமான பிற அலுவல்களும் கூட்டத்தொடரின் போது எடுத்துக் கொள்ளப்படும்.
இந்திய பொருளாதார ஆய்வறிக்கை இன்று நாடாளுமன்ற அவைகளின் முன் வைக்கப்படும். 2024 ஆம் ஆண்டுக்கான ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான பட்ஜெட்டும் 2024 ஜூலை 23 அன்று தாக்கல் செய்யப்படும். உத்தேசமாக, 6 சட்ட அலுவல்களும், 3 நிதி அலுவல்களும் இந்தக் கூட்டத்தொடரில் எடுத்துக் கொள்ளப்படுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.