For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

எச்சரிக்கை!! மது அருந்தி விட்டு, மறந்தும் கூட இந்த மாத்திரைகளை சாப்பிட்டு விடாதீர்கள்..

medicines-to-avoid-after-drinking-alcohol
05:24 AM Dec 05, 2024 IST | Saranya
எச்சரிக்கை   மது அருந்தி விட்டு  மறந்தும் கூட இந்த மாத்திரைகளை சாப்பிட்டு விடாதீர்கள்
Advertisement

பொதுவாக நாம் தெரியாமல் செய்யும் ஒரு சில தவறுகள் பெரிய பிரச்சனைகளில் முடிந்துவிடும். அந்த வகையில், மருந்து அருந்திவிட்டு ஒரு சில மருந்து - மாத்திரைகளை சாப்பிட்டால் பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடும். இதனால் மது அருந்திய பிறகு எந்த மாத்திரைகளை எல்லாம் சாப்பிட கூடாது என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

Advertisement

1. நீங்கள் மது அருந்திவிட்டு, மனச்சோர்வு மற்றும் பதற்றத்தை குறைக்கும் மாத்திரைகளை சாப்பிட்டால், ரத்த அழுத்தம் அதிகரித்து விடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

2. மது அருந்திவிட்டு ஆர்த்ரிடிஸ் நிவாரணத்திற்கு எடுத்துக்கொளும் மாத்திரைகளை நீங்கள் எடுத்துக்கொண்டால், அல்சர், கல்லீரல் பாதிப்பு மற்றும் வயிற்றில் ரத்தக்கசிவை உண்டாக அதிக வாய்ப்புள்ளது.

3. ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் மாத்திரைகளை எடுப்பவர்கள், மதுபானம் குடிக்காமல் இருப்பதே உங்களுக்கு நல்லது. ஏனென்றால், சுகர் இருப்பவர்கள் மது அருந்தும் போது, சுகர் அதிகமாக குறைத்துவிடும். இதனால் உயிருக்கே ஆபத்தாகலாம். மேலு இதனால் ரத்த அழுத்தத்திலும் பல மாற்றத்தை ஏற்படும்.

4. அதே போல், மது அருந்திவிட்டு உயர் ரத்த அழுத்தத்திற்கு மாத்திரைகள் சாப்பிட்டால், தலைசுற்றல், மயக்கம், அதீத தூக்கம், இதயத்தில் அரித்மியா போன்ற பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

5. சில வலி நிவாரணி மாத்திரைகளை மது அருந்திவிட்டு சாப்பிடுவதால், வயிற்று வலி, ரத்தக்கசிவு, அல்சர் மற்றும் கல்லீரல் சேதத்தையும் ஏற்படுத்தி விடும்.

6. பலர் மது அருந்திவிட்டு, நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டலுக்கு மாத்திரை சாப்பிடுவது உண்டு. ஆனால் அது முற்றிலும் தவறு. ஏனென்றால், அது இதயத்துடிப்பை அதிகரிப்பது மட்டும் இல்லாமல், ரத்த அழுத்தம் அளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்

7. உடலில் ஆல்கஹால் உள்ளடக்கம் இருந்தால், ஆன்டிபயாடிக் மாத்திரைகள்,
தூக்க மாத்திரைகளை உட்கொள்ளவே கூடாது. ஏனெனில், சுவாசிப்பதில் சிரமம், நினைவாற்றல் பிரச்சனை, தலைச்சுற்றலை, கல்லீரல் சேதம், வயிற்று வலி, வாந்தி, போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.

Read more: உருளைக்கிழங்கு சிப்ஸ் சாபிட்டால் புற்றுநோய் வருமா? எச்சரிக்கும் நிபுணர்கள்..!

Tags :
Advertisement