முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

புற்று நோயை குணப்படுத்தும் அதிசய பூ..!

08:45 PM Jan 23, 2024 IST | 1newsnationuser5
Advertisement

தற்போதுள்ள கால கட்டத்தில் உலக்ம் முழுவதும் பலரும் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துகொண்டு வருகின்றனர். சிலர் புற்று நோயின் தீவிரத்தால் உயிரிழந்தும் போகின்றனர். இந்த புற்று நோயை அழிக்கும் மருந்தாக பீவர் பியூ என்று அழைக்கபடும் செவ்வந்தி பூ பயன்படுகிறது என்று பர்மிங்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியின் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

Advertisement

மேலும் இந்த பூவை பயன்படுத்தி புற்று நோயாளிகளை பாதிக்கும் லுக்கேமியா செல்களை முழுவதுமாக அழிக்க மருந்துகளை உருவாக்கலாம். செவ்வந்தி பூவின் இலைகளில் பார்த்தினோலைடு என்ற வேதிப்பொருள் உள்ளது. இது புற்றுநோய் செல்களை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று பர்மிங்காம் ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.

இது மட்டுமல்லாது ஒற்றைத் தலைவலி மற்றும் பிற உடல் வலிகளுக்கும் 100 ஆண்டுகளுக்கு மேலாக சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வரும் அதிசய பூவாக இருந்து வருகிறது. சளி மற்றும் திடீர் காய்ச்சலுக்கு அருமருந்தாக இருந்து வரும் இந்த பூவை காய்ச்சல் குறைப்பான் என்றும் அழைத்து வருகின்றனர்.

சமீபத்தில் இந்த பூவை பயன்படுத்தி எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் புற்று நோய்க்கு எதிரான மருந்துகளை கண்டுபிடிக்கும் சோதனையில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டனர். இந்த சோதனை வெற்றிகரமாக முடிவுக்கு வந்து எலும்பு மஜ்ஜை புற்று நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மருந்தின் அடுத்த கட்ட பரிசோதனைக்கு பிறகு மனிதர்களுக்கு தரப்படும் என்று அறிவித்துள்ளனர்.

Tags :
cancerFlowerhealthyRemedies
Advertisement
Next Article