முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கல்லீரல் ஆரோக்கியத்துக்கு திப்பிலி.! இனி சாப்பிட மிஸ் பண்ணமாட்டிங்க.!

05:50 AM Dec 04, 2023 IST | 1newsnationuser4
Advertisement

பண்டைய காலம் முதலே நம் இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவத்தில் சுக்கு மிளகு திப்பிலி ஆகிய நறுமணப் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில் திப்பிலி பல அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. திப்பிலியின் மருத்துவ குணங்கள் மற்றும் அவற்றால் கட்டுப்படும் நோய்கள் பற்றி பார்ப்போம்.

Advertisement

மருத்துவ மூலிகையான திப்பிலியில் பீட்டாசிட்டோஸ்டெரல், ஆல்கலாய்டுகள் போன்ற வலி நிவாரணிகள் நிறைந்திருக்கிறது. இவற்றில் யூஜனால்,பைப்ரின்கள்,கிளைகோசைடுகள், ரெசின்கள், டர்பனாய்டுகள் போன்ற பல என்சைம்கள் நிறைந்து இருக்கின்றன. ஆயுர்வேத மருத்துவத்தில் இவை சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வைக்கிறது. இவை ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயராமல் எப்போதும் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறது.

திப்பிலியில் உள்ள என்சைம்கள் காரணமாக இவை சிறந்த பாக்டீரியா மற்றும் கிருமி எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கின்றன. இப்படியே உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலானது கிருமி மற்றும் பாக்டீரியா தொற்றிலிருந்து பாதுகாக்கப்படுகிறது. கல்லீரல் ஆரோக்கியத்தில் திப்பிலியின் பங்கு முக்கியமானது. இவை கல்லீரலில் நச்சுக்கள் அதிகம் தங்காமல் பாதுகாக்கிறது. மேலும் மஞ்சள் காமாலை நோய் தொற்று ஏற்படாமல் உடலை பாதுகாப்பதில் திப்பிலி முக்கிய பங்கு வகிக்கிறது.

Tags :
health benefitsIndian long pepperLiverThippili
Advertisement
Next Article