முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சீசன் ஜலதோஷம் காய்ச்சலா.? இந்த ஒரு இலை போதும்.! மகத்துவமான மருத்துவ பயன்களை கொண்ட நொச்சி இலை.!

05:57 AM Dec 21, 2023 IST | 1newsnationuser4
Advertisement

நொச்சி அற்புதமான மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு தாவரமாகும். இதன் இலைகள் பல்வேறு விதமான மருத்துவ பயன்களை கொண்டிருக்கிறது. சித்த மருத்துவத்தில் நொச்சி இலையின் பங்கு மகத்தானது. இந்த இலைகள் துவர்ப்பு மற்றும் காரச் சுவையுடையது. ஜலதோஷம் காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியவற்றிற்கு இதன் நிலைகள் சிறந்த மருந்தாக பயன்படுகிறது .

Advertisement

இவற்றின் இலைகளுடன் கற்பூரவள்ளி இலைகளையும் சேர்த்து ஆவி பிடித்தால் நெஞ்சு சளி குணமடையும். மேலும் இவற்றின் இலைகளை வெந்நீரில் சேர்த்து குளித்து வர காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் குணமாகும். நொச்சி செடியின் இலைகளை எரித்து அதன் புகையை சுவாசித்தால் கடுமையான தலைவலி கூட நொடி பொழுதில் குணமாகிவிடும்.

இந்த இலைகளுக்கு உடல் அசதியை போக்கும் தன்மை இருக்கிறது. மேலும் இவை சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படுகிறது. புண்கள் மற்றும் வீக்கத்திற்கும் நொச்சி இலைகள் சிறந்த மருந்தாக பயன்படுகின்றன. ஒரு டீஸ்பூன் நொச்சி இலையுடன் ஒரு கிராம் அளவிற்கு மிளகு சேர்த்து நெய் சேர்த்து வதக்கி சாப்பிட்டு வர இடுப்பு வலி முழங்கால் வலி ஆகியவை குணமாகும். நொச்சி இலைகளை வதக்கி ஒத்தடம் கொடுத்தால் வீக்கங்கள் குறையும்.

Tags :
Chaste Treehealth tipshealthy lifeMedicinal benefitsNatural Remedy
Advertisement
Next Article