மூக்கிரட்டை கீரை கேள்வி பட்டு இருக்கீங்களா.? நம் வீட்டைச் சுற்றி இருக்கும் இந்தச் செடியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா.?
நம் வீட்டைச் சுற்றியும் தோட்டங்களிலும் தரையில் படர்ந்து இருக்கும் இந்த அற்புதமான கீரையை பெரும்பாலும் பயன்படுத்தி இருக்க வாய்ப்பு இல்லை. இந்தக் கீரையின் மருத்துவ பலன்களை நாம் தெரிந்திருந்தால் என்றோ இதனை பயன்படுத்த துவங்கியிருப்போம். அப்படி ஒரு அற்புதமான கீரை தான் மூக்கிரட்டை கீரை. ஊதா நிற பூக்களோடு நம் வீட்டைச் சுற்றிலும் தோட்டத்திலும் இந்தக் கீரை செடியை காணலாம்.
மூக்கிரட்டை கீரையை சுத்தம் செய்து அதன் தண்டுகளோடு சேர்த்து நறுக்கி 4 தம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு டம்ளராக வற்றும் வரை நன்றாக சுண்டக்காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் சிறுநீரக நோய்களுக்கு சிறந்த தீர்வாக அமையும். மேலும் இந்தக் கீரையை அரைத்து சிறிய அளவில் உருண்டை பிடித்து காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வர மூலம் குணமடையும்.
இந்தக் கீரையுடன் பாசிப்பருப்பு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு ரத்தம் விருத்தி அடைவதோடு வாத நோய்களுக்கும் சிறந்த மருந்தாக அமைகிறது. ஜீரண சக்திக்கு உதவுவதோடு இவற்றில் புற்று நோய் எதிர்ப்பு பண்புகளும் அதிக அளவில் நிறைந்து இருக்கிறது. இந்தக் கீரை மஞ்சள் காமாலை நோயினால் கல்லீரல் பாதிக்கப்படுவதையும் தடுக்கிறது. இந்தக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது கார உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும் உடல் குளிர்ச்சியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.