ஆமணக்கு எண்ணையின் மருத்துவ குணங்கள் மற்றும் அதன் நன்மைகள் என்ன.?
ஆமணக்குச் செடி ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இலை, விதை, காய்கள் என அனைத்துமே மருத்துவ பயன்கள் கொண்டதாக இருக்கின்றது. இந்த ஆமணக்கு செடியின் விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் என்னை விளக்கெண்ணெய் என அழைக்கப்படுகிறது. இந்த எண்ணையின் மருத்துவ பயன்கள் என்ன என்று பார்ப்போம்.
இந்த ஆமணக்கு விதையிலிருந்து எடுக்கப்படும் என்னை பெண்களுக்கு ஏற்படும் ஃபைப்ராய்டு கட்டிகள் உருவாகாமல் தடுக்கிறது. இவற்றில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகள் உடலில் ஏற்படும் இன்ஃப்ளமேசனை குறைக்கிறது. இதன் காரணமாக ஃபைப்ராய்டு கட்டிகள் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது.
இந்த ஆமணக்கு எண்ணையை இரண்டு துளிகள் கண்களில் விட்டால் கண்களில் இருக்கும் சூடு மற்றும் கண்கள் சிவந்து இருப்பது போன்றவை குணமடையும். மேலும் இந்த எண்ணெய் பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் சீராக செயல்படுவதற்கும் கர்ப்பப்பையின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. மேலும் உடலில் ரத்த ஓட்டத்தையும் சீர்படுத்துகிறது.
இந்த எண்ணெய் வாத நோய்க்கு ஒரு சிறந்த மருந்தாகும். விளக்கெண்ணையை ஆமணக்கு இலைகளில் நனைத்து வாத நோயாளிகளுக்கு தேய்த்து வர நாள்பட்ட வாதம் குணமடையும். மேலும் மூட்டுகளில் ஏற்பட்டிருக்கும் வீக்கம் மற்றும் வலிகளுக்கு இந்த எண்ணெயில் ஒத்தடம் கொடுக்க வலி நீங்கி நல்ல நிவாரணம் கிடைக்கும்.