மருத்துவத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி பணியிட மாற்றம்..!! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!!
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, வனத்துறை செயலாளராக பதவி வகித்து வந்த சுப்ரியா சாஹூ, மருத்துவத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், மருத்துவத்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல், நீர்வளத்துறை செயலாளராக மணிவாசகம், சுற்றுச்சூழல் துறை செயலாளராக செந்தில்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
யார் இந்த ககன் தீப் சிங் பேடி..?
இவர், பல்வேறு துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் சென்னை மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வருகிறார். 1993இல் தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியைத் தொடங்கிய இவர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராகவும், மதுரை, கோவையில் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.
கடந்த 2004இல் ஏற்பட்ட சுனாமியின்போது கடலூர் மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த ககன் தீப் சிங் பேடி மேற்கொண்ட நிவாரணப்பணிகள் அவருக்கு பெரும் பாராட்டுக்களை பெற்று கொடுத்தது. சுனாமியால் வீடுகளை இழந்தவர்களை தங்க வைக்க சிறப்பு ஏற்பாடு, அறிவிக்கப்பட்ட நிவாரணப் பணிகளை அவர் செயல்படுத்திய விதம் குட்புக்கில் இடம் பெற வைத்தது. கடலூர் மக்களே அவரை பாராட்டி பேனர் வைத்தனர்.
2015 வெள்ளத்தின் போது கடலூர் மாவட்டத்தில் ஒரு மாத காலம் இரவு பகல் பாராமல் பணியாற்றி, விரைவில் நிலைமை சீரடைய உதவினார். மேலும் வர்தா, ஒக்கி புயல் பாதிப்பின் போதும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ககன்தீப் சிங் பேடியே நியமிக்கப்பட்டார். கஜா புயலின் போதும் சிறப்பாகப் பணியாற்றினார். பேரிடர் காலங்களில் சிறப்பாக பணியாற்றுபவர் எனும் பெயர் இவருக்கு எப்போதும் உண்டு. கொரோனா, சென்னை பெருமழை வெள்ளம் என தலைநகரில் துயரங்கள் தொடர்ந்த நேரத்தில், அவற்றிலிருந்து மக்களைக் காப்பதில் ககன் தீப் சிங் மிகச்சிறப்பாகப் பணியாற்றினார். எந்த துறையை கொடுத்தாலும் அதில் சிறப்பாக செயல்படகூடியவர் என்ற பெயர் பெற்ற ககன் தீப் சிங் பேடி தற்போது ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More : மக்களே..!! இந்த தவறை செய்தால் உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் மேல கஷ்டம் வரும்..!!