செக்...! இனி பானிபூரி & தெருவோர கடைகளுக்கு மருத்துவ சான்று மற்றும் பதிவு உரிமம் கட்டாயம்...!
பானிபூரி மற்றும் தெருவோர கடைகளுக்கு மருத்துவ சான்று மற்றும் பதிவு உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
சாலையோர உணவு உற்பத்தி செய்யும் அனைத்து கடைகளும் உணவு பாதுகாப்பு துறையின் கீழ் வழங்கப்படும் உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். உணவு தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்து நிலைகளிலும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் - 2006 மற்றும் ஒழுங்குமுறைகள் - 2011 இல் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். உரிமம் பெறாத கடைகளில் மீது தமிழக முழுவதும் நடவடிக்கையில் எடுக்கப்பட்டு வருகிறது.
பானிபூரி மற்றும் தெருவோர கடைகளுக்கு மருத்துவ சான்று மற்றும் பதிவு உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. அதேபோல பானிபூரி விற்பனை செய்வோருக்கும் சுகாதாரமான முறையில் விற்பனை செய்தல் குறித்த பயிற்சி மற்றும் உரிமம் பெறுதல் அவசியம் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் உணவு கடைகளில் வாங்கும் பொழுது தரமற்ற, காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் உணவுப் பொருட்களில் உள்ள குறைபாடுகள் குறித்து 9444042322 என்ற 'வாட்ஸ்அப்' எண்ணிற்கு அல்லது unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளிக்கலாம்.