'JN.1' வேகமாக உருமாறும் கொரோனாவின் புதிய வகை.! மருத்துவர்கள் எச்சரிக்கை.!
2020 மற்றும் 21 ஆம் ஆண்டுகளில் கொரோனா வைரஸ் பரவல் உலகை முடக்கியதோடு உலகெங்கிலும் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் . 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கோவிட்-19 தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
எனினும் ஆண்டுதோறும் புதிய வகை வைரஸ்கள் தோன்றி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவில் இருந்து உருமாறிய ஓமிக்ரான் என்ற வைரஸ் உருவாகி உலகை அச்சிறுத்தியது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து மீண்டும் ஒரு புதிய வேரியண்ட் தோன்றி பொதுமக்களிடம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோனா வைரஸிலிருந்து உருமாறிய இந்த புதிய வைரஸ் ஜேஎன் 1 என்று அழைக்கப்படுகிறது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இந்த வைரஸ் தொற்று முதல் முதலாக லக்சம்பெர்க் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் இன்று உலகம் முழுவதும் 41 நாடுகளில் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய வகை கொரோனா தொற்று இந்தியாவிலும் டிசம்பர் மாதம் கேரள மாநிலத்தில் முதல் முதலாக கண்டறியப்பட்டது. அங்குள்ள மூதாட்டி ஒருவருக்கு ஜே என் 1 வகை கொரோனா தொற்று ஏற்பட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
மேலும் தமிழ்நாடு மகாராஷ்டிரா கோவா பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஜேஎன் 1 வகை கொரோனா ஓம்மிக்ரானில் ஒன்றே B2.86 வகையைக் கொண்டிருக்கிறது. எனினும் இதில் L455S என்ற புரதத்தை கொண்டிருக்கிறது. இதன் காரணமாக இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த புதிய வகை ஜேஎன் 1 வைரஸ் தற்போது மக்களிடம் பரவி வரும் கொரோனா வகைகளில் புதுமையானது என டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் தெரிவித்திருக்கிறார். இந்த புதிய வகை வைரஸ் பல மாற்றங்களை கொண்டிருப்பதோடு வேகமாக பரவும் தன்மையுடையது எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் கொரோனா வைரஸிலிருந்து தோன்றிய பிற வைரஸ்களில் இருந்து சில மாற்றங்களை கொண்டிருக்கும் இந்த வைரஸ் தீவிரமான சுவாச பிரச்சனையை ஏற்படுத்தக் கூடியது எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த வைரசால் ஏற்படும் பாதிப்புகளை எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும் யோச்சுக்கு எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றல் எவ்வாறு உருவாகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் ஜெயதேவன் தெரிவித்துள்ளார்.