அதிகரிக்கும் அம்மை நோய்!… பெண்களின் சினைப்பையை பாதிக்கும் ஆபத்து!… அறிகுறிகள் இதோ!
Measles: கோடைக்கால நோய்களிலேயே மிகவும் கொடுமையானது அம்மை நோய்தான். தற்போது அம்மை நோய் வேகமாகப் பரவி வருகிறது. நம்மை அன்றாட வாழ்க்கையில் இருந்து முடக்கிப்போடும் ஒரு நோய் இது. பெற்றார், உறவினர்கள் அக்கம் பக்கத்தினர், ஏன் நம் வீட்டில் இருப்பவர்கள் கூட நம்மிடம் வர பயப்படுவார்கள். அந்த அளவுக்குக் கடுமையான வியாதிதான் இது. அம்மை நோய் எப்படிப் பரவுகிறது என்று பார்த்தால் நிச்சயம் இது ஒரு தொற்று நோய்தான்.
தமிழகத்தை பொருத்தவரை 350-க்கும் மேற்பட்டோர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களில் 7 பேருக்கு ரூபெல்லா எனப்படும் ஜெர்மன் தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கோடை கால அம்மை நோய்கள் கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இருந்ததை விட தற்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், பொன்னுக்கு வீங்கி எனும் அம்மை நோய் வந்து அது தீவிரமானால் பெண்களின் சினைப்பைகளை பாதிக்கும் என டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது பேஸ்புக் பதிவில், தற்போது நம் நாட்டில் கோடைக்காலம் நிலவி வருவதால் அம்மை நோய் பரப்பும் வைரஸ்களுக்கு ( தீநுண்மிகள்) வழக்கம் போல பரவல் காலமாகும். சின்னம்மை ( சிக்கன் பாக்ஸ்), தட்டம்மை/ சின்னமுத்து / மணல்வாரி அம்மை ( மீசில்ஸ்), அக்கி ( வேரிசெல்லா சோஸ்டர்) , கூகைக்கட்டு அம்மை / பொன்னுக்கு வீங்கி ( மம்ப்ஸ்) என்று பல வைரஸ்கள் பரவி குறிப்பாக குழந்தைகளிடையே அம்மை நோயை ஏற்படுத்துகின்றன.
இவற்றுள் மம்ப்ஸ் எனும் கூகைக்கட்டு அம்மை தற்போது குழந்தைகளிடையேவும் பள்ளி செல்லும் பருவத்தினரிடையேவும் அதிகமாகப் பரவி வருகிறது. ஏனைய வைரஸ் தொற்றுகளைப் போலவே -அதீத காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, உடல் வலி, வயிற்றுப் பகுதி வலி, பசியின்மை போன்ற அறிகுறிகளுடன் முக்கியமாக கன்னப் பகுதிக்கு கீழே கழுத்தின் ஒரு புறத்திலோ இரு புறங்களிலுமோ வீக்கம் ஏற்படும்.
இதற்குக் காரணம் மம்ப்ஸ் வைரஸ் தாக்கும் போது எச்சிலை உருவாக்கும் பரோட்டிட் சப் லிங்குவல் சப் மேண்டிபுலார் சுரப்பிகளில் அழற்சியை உருவாக்கி வீக்கத்தை உருவாக்குகிறது. இதன் விளைவாக "கூகை" - ஆண் ஆந்தை போல கன்னத்தின் இரு பக்கத்திலும் வீக்கம் இருப்பதால் கூகைக் கட்டு என்று அழைக்கப்படுகிறது.
இந்தத் தொற்று ஏற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையாக காய்ச்சலைக் குறைக்கும் பாராசிட்டமால் வழங்கலாம். வலி அதிகமாக இருக்கும் என்பதால் மருத்துவர் பரிந்துரையில் வலி நிவாரணிகள் வழங்கலாம். வீக்கம் ஏற்பட்ட இடத்தில் குளிர் அல்லது சுடு ஒத்தடம் வழங்கலாம். இது வலியைக் குறைத்து சற்று இதம் தரும். உணவுகளை கஞ்சி , மோர் , பழச்சாறு, கூழ் வடிவத்தில் திரவமாக வழங்க வேண்டும். அதிகமான அளவு நீரைப் பருக வழங்க வேண்டும். அமில பழச்சாறுகளான எலுமிச்சை ஆரஞ்சு போன்றவற்றை தவிர்த்தல் நலம். கூகைக்கட்டு அம்மை நோய் தானாகவே 2 முதல் 3 வாரங்களில் குணமாகும்.
எனினும் பெரும்பான்மையினருக்கு தீவிர தொற்றாக மாறாமல் சாதாரண நோயாகவே கடந்து செல்லும். இந்த நோய் இருமல், தும்மல் , மூக்கொழுகுதல், சளி போன்றவற்றால் எளிதாகப் பிற குழந்தைகளுக்குப் பரவும். எனவே காய்ச்சல் வந்ததும் அல்லது கண்ணப் பகுதியில் உள்ள வீக்கம் தொடங்கிய முதல் ஐந்து நாட்களுக்கேனும் "தனிமைப்படுத்துவது" நோய் பரவல் நிகழாமல் தடுக்க உதவும்.
Readmore: தமிழகத்தில் மறுவாக்குப்பதிவா?… கணக்கெடுக்கும் பணி தீவிரம்!… சத்யபிரதா சாஹூ முக்கிய அறிவிப்பு!