முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இரண்டாம் கட்ட கலந்தாய்வு கால அவகாசம் நீட்டிப்பு...!

MBBS, BDS Second Phase Counseling Date Extension
06:05 AM Sep 20, 2024 IST | Vignesh
Advertisement

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இரண்டாம் கட்ட கலந்தாய்வு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. அரசு கல்லூரிகளில் மீதமுள்ள 85 சதவீத இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 6,630 எம்பிபிஎஸ் இடங்கள், 1,683 பிடிஎஸ் இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

Advertisement

இதில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு 496 எம்பிபிஎஸ் இடங்கள், 126 பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவைதவிர தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,719 எம்பிபிஎஸ் இடங்கள், 430 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஆன்லைனில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்கி 27-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவகல்வி இயக்ககம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; கல்லுாரிகளில் இருந்து வெளியேறும் மாணவர்களால் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 20-ம் தேதி காலை 10 முதல் 23-ம் தேதி மாலை 5 மணி வரை கலந்தாய்வில் பங்கேற்கலாம். இடஒதுக்கீடு விவரங்கள் 26-ம் தேதி வெளியிடப்படும். இடங்கள் பெற்ற மாணவர்கள் அக்டோபர் 5-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
bdsCouncellingmbbstn government
Advertisement
Next Article