முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வேலையை தொடங்கிய திமுக...! 2024 தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் மேயர் பிரியா...!

06:30 AM Jan 20, 2024 IST | 1newsnationuser2
Advertisement

மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தின் ஆளும் திமுக அரசு தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் மூன்று குழுக்களை அமைத்தது. தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய 5 பேர் இடம் பெறுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

Advertisement

இந்த குழு வரும் மக்களவை தேர்தலுக்கான பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 6 பேர் கொண்ட குழுவுக்கு அக்கட்சி எம்.பி டி.ஆர்.பாலு தலைமை தாங்குவார் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அக்கட்சியின் எம்.பி. ஆ.ராசா, விவசாயத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எம்.எல்.ஏ. எழிலன் நாகநாதன், மேயர் பிரியா உள்ளிட்ட இளையோர்க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பி.டி.ஆர். பழனிவேல் தியகராஜன், கோவி. செழியன், ராஜேஸ்குமார் எம்.பி., ஆகிய புதியவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags :
DmkkanimozhiMayor Priyamk stalinudhaynidhi stalin
Advertisement
Next Article