முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மே 30 கடைசி நாள்... e-kyc அப்டேட் செய்யவில்லை என்றால் கேஸ் மானியம் ரூ.300 கட்...?

05:50 AM May 23, 2024 IST | Vignesh
Advertisement

பிரதான் மந்திரி யோஜனா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் நபர்களா நீங்கள்...? தொடர்ந்து சமையல் எரிவாயு மானியம் வேண்டுமென்றால் மே 30-ம் தேதிக்குள் e-kyc அப்டேட் செய்ய வேண்டும்.

Advertisement

பிரதமர் நரேந்திர மோடி 2016 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை கொண்டு வந்தார். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப பெண்களுக்கு LPG இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் கீழ் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்கள் இலவச கேஸ் இணைப்புடன் வழங்கப்படுகிறது. மேலும் ரூ. 300 மானியம் மத்திய அரசு வழங்குகிறது. ஆனால் இந்த மானியம் பெற வேண்டுமானால் e-kyc அப்டேட் செய்து இருக்க வேண்டும்.

மத்திய பெட்ரோலிய அமைச்சகமும், எரிவாயு நிறுவனங்களும் கேஸ் ஏஜென்சியிடம் சென்று e-kyc விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும். மே 30 இதற்கான கடைசி நாள். e-kyc அப்டேட் செய்தால் எரிவாயு மானியம் பெறலாம். எரிவாயு நிறுவனங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. https://www.mylpg.in/ இணையதளத்திற்கு சென்று தங்களது e-kyc அப்டேட் செய்து கொள்ளலாம். இது குறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில், கேஸ் ஏஜென்சிகள் தனித்து செயல்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

Advertisement
Next Article