சோகம்...! தீயில் கருகிய 6 படகுகள்... 3 சுற்றுலா பயணிகள் மரணம்... மீட்பு தீவிரம்...!
காஷ்மீரில் நேற்று அதிகாலை ஹவுஸ் படகில் திடீரென தீப்பற்றியது. இதனால் அருகில் இருந்த படகுகளுக்கு வேகமாக பரவியது. இந்த தீ விபத்தில் 6 படகுகள் மற்றும் அதை ஒட்டியிருந்த மரக் கொட்டகைகள் தீப்பிடித்து எரிந்ததால் 40 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த துயர சம்பவத்தில் மூன்று சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
சம்பவத்திற்குப் பிறகு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன, மேலும் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் தீயை அணைக்க பல மணி நேரம் போராடினர். தால் ஏரி தீ விபத்தில் உயிரிழந்த மூன்று சுற்றுலா பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகள் பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் அடையாளத்தை கண்டறியும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காஷ்மீர் ஹவுஸ்போட் உரிமையாளர்கள் மற்றும் ஹவுஸ்போட் அசோசியேஷன் அதிகாரிகளிடம் குறிப்பாக எல்ஜி மனோஜ் சின்ஹா இந்த சம்பவத்தை நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார். காஷ்மீரில் கடுமையான குளிர்காலம் நெருங்கி வருவதால் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.