For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தென் கொரியா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!! - 20 பேர் பலி

Local fire official Kim Jin-young told a televised briefing said most of the missing people were foreign nationals including Chinese. He said the mobile phone signals of the missing people were tracked to be coming from the second floor of the factory.
03:27 PM Jun 24, 2024 IST | Mari Thangam
தென் கொரியா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து     20 பேர் பலி
Advertisement

தென் கொரியா தலைநகருக்கு அருகில் உள்ள லித்தியம் தொழிற்சாலையில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Advertisement

தலைநகர் சியோலுக்கு தெற்கே அமைந்துள்ள ஹ்வாசோங்கில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் உள்ளூர் நேரப்படி காலை 10:30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து உள்ளூர் தீயணைப்பு அதிகாரி கிம் ஜின்-யங் கூறுகையில், தீ விபத்தில் பணியாளர்கள் பதிவேடும் எரிந்து போனதால், எத்தனை பேர் உள்ளே மாட்டிக்கொண்டுள்ளனர் என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சீன நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் அதிக பேர் இந்த தொழிற்சாலையில் பணி புரிந்தனர்.

இதுவரை 20 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனத் தெரிவித்தார். மேலும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனக் கூறிய அதிகாரி, இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.

Read more ; காதலனுடன் ஓடிய கல்லூரி மாணவி..!! தேடிச் சென்ற சித்தப்பாவை வெட்டி சாய்த்த கொடூரம்..!! கோவையில் அதிர்ச்சி..!!

Tags :
Advertisement