மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்..!! உக்ரைனில் அமெரிக்க தூதரகம் மூடல்..!! அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்..!!
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் செயல்பட்டு வந்த அமெரிக்க தூதரகத்தை தற்காலிகமாக மூடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று (நவம்பர் 20) கீவ் நகர் மீது ரஷ்யா மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவலை மேற்கோள் காட்டி, அமெரிக்கத் தூதரகம் அதன் செயல்பாடுகளை தற்காலிகமாக மூடியுள்ளது. மேலும், தூதரகத்தில் இருப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதரகம் தனது அறிக்கையில், "மிகவும் எச்சரிக்கையுடன், தூதரகம் மூடப்படும். தூதரகத்தில் இருந்து அனைவரும் உடனே வெளியேற வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்கத் தயாரிப்பான ATACMS ஏவுகணைகளை உக்ரைன் ரஷ்ய எல்லைக்குள் செலுத்திய ஒரு நாளுக்குப் பிறகு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல மாதங்களாக, மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்ட நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்ய எல்லைக்குள் ஆழமாகத் தாக்க உக்ரைனை அனுமதிப்பது மோதலை அதிகரிக்கும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முன்னர் இத்தகைய நடவடிக்கைகள் விளைவுகளுக்கு வழிவகுக்கும், நேட்டோ நாடுகளை நேரடியாக போரில் ஈடுபடுத்தும் என்று எச்சரித்திருந்தார்.
Read More : வாடகைக்கு வீடு..!! மஜாவாக நடந்த பாலியல் தொழில்..!! பிரபல பெண் புரோக்கர் அதிரடி கைது..!!