மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும்…! கைகுலுக்குவதைத் தவிர்க்கவும்... அரசு அறிவுறுத்தல்…!
கர்நாடகாவில் HMPV வைரஸ் பாதிப்பு காரணாமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொற்றால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் போன்ற அறிகுறிகளுடன் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) எனும் புதிய வைரஸ் சீனா வடகிழக்கு மாகாணங்களில் பரவ தொடங்கியது. HMPV வைரஸ் என்பது கொரோனா போலவே, மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும் வைரஸ் ஆகும். இந்த வைரஸ் குறிப்பாக, 14 வயதுக்கு குறைவான வயது கொண்டவர்களை அதிகமாக தாக்குகிறது.
இந்த வைரஸ் சீனாவை தொடர்ந்து இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 8 மாதக் குழந்தை மற்றும், 3 மாத குழந்தை என 2 வழக்குகளும். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இரண்டு மாத குழந்தைக்கும், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 5 மாத குழந்தைக்கும், தமிழ்நாடு மாநிலம் சென்னையில் 2 குழந்தைகள் என இந்தியாவில் இதுவரை 6 பாதிப்புகள் உறுதியாகியுள்ளது.
HMPV, பாதிப்பு முதன்முதலில் 2001ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட சுவாச வைரஸ். இந்த வைரஸ் ஏற்கனவே இந்தியா உட்பட உலகளாவிய புழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் 2 குழந்தைகளுக்கு HMPV பாதிப்பு கண்டுபிடித்ததை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
கர்நாடகாவை அடுத்து மகாராஷ்டிரா அரசும் சுகாதார ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் தனிப்பட்ட மற்றும் பொது இடங்களில் சுகாதாரத்தை கவனித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருமல் அல்லது தும்மலின் போது கைக்குட்டைகள் மற்றும் சானிடைசர்களைப் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படுகிறது, அதே நேரத்தில் மக்கள் கைகுலுக்குவதைத் தவிர்க்கவும், நோய்வாய்ப்பட்டவர்களிடமிருந்து விலகி இருக்கவும், மற்றவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் நெரிசலான இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Read more: அலட்சியமா இருக்காதீங்க.. HMPV வைரஸின் ஆரம்ப கால அறிகுறிகள் இது தான்..!