For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தண்ணீரில் boxing செய்த மேரிகோம்!. 'கிறிஸ்தவராக இருந்தாலும் கும்பமேளாவில் புனித நீராடி உற்சாகம்!.

Mary Kom did water boxing! 'Even though I am a Christian, I am excited to take a holy dip at the Kumbh Mela!'
07:06 AM Jan 29, 2025 IST | Kokila
தண்ணீரில் boxing செய்த மேரிகோம்    கிறிஸ்தவராக இருந்தாலும் கும்பமேளாவில் புனித நீராடி உற்சாகம்
Advertisement

Mary kom: உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மஹா கும்பமேளா நிகழ்ச்சியில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

Advertisement

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மஹா கும்பமேளா நிகழ்ச்சி, கடந்த 13ல் துவங்கியது. பிப்., 26 வரை இந்த நிகழ்ச்சி நடக்கவுள்ள நிலையில், இதுவரை, 10 கோடிக்கும் மேற்பட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இந்நிலையில், ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், 42, மஹா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக, பிரயாக்ராஜுக்கு நேற்று வந்தார். திரிவேணி சங்கமத்தில் அவர் புனித நீராடினார். மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்ட மேரி கோம், தண்ணீரில் ஓடி பாக்சிங்கும் (boxing) செய்துகாண்பித்தார்.

இதன் பின், செய்தியாளர்களிடம் பேசிய மேரி கோம், ''மஹா கும்பமேளாவுக்காக சிறப்பான ஏற்பாடுகளை செய்த பிரதமர் மோடி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி. இது தான் என் முதல் அனுபவம். ''நான் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், கும்பமேளாவுக்கு ஆதரவு தெரிவிக்கவே இங்கு வந்தேன். இதில் பங்கேற்றது மகிழ்ச்சி,'' என்றார்.

Readmore: மகா கும்பமேளாவில் பயங்கரம்!. கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு?. மௌனி அமாவாசையையொட்டி திரண்ட மக்கள்!

Tags :
Advertisement