அதிரடியாக களமிறங்கும் மாருதியின் எலக்ட்ரிக் கார்..!! 230 கிமீ அசால்ட்டாக பயணிக்கலாம்..!!
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை மக்கள் மத்தியில் அதிகமாகி கொண்டே வருகிறது. இதனால் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. தற்போது டாடா நிறுவனம் தான் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. மற்ற நிறுவனங்களும் எலெக்ட்ரிக் கார்களை மெல்ல மெல்ல அறிமுகப்படுத்தி வரும் நிலையில், மாருதி நிறுவனம் இந்தாண்டு இறுதி அல்லது 2025ஆம் ஆண்டு தொடக்கத்திற்குள் தனது முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சுஸூகி நிறுவனம் டோக்கியோவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடபிள்யூ எக்ஸ் என்ற கான்செப்ட் காரை காட்சிப்படுத்தி இருந்தது. இந்த காரை மாருதி நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வரும் பட்சத்தில் டியாகோ இவி சிட்ரோன் ஆகிய கார்களுக்கு போட்டியாகவும் எம்ஜி கோமெட் இவி காருக்கு போட்டியாகவும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் அறிமுகமாக வாய்ப்புகள் உள்ளன.
மாருதி நிறுவனம் இவிஎக்ஸ் காரை முதல் எலெக்ட்ரிக் காராக அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருந்தாலும் அடுத்தடுத்து எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் உள்ளது. மாருதி நிறுவனத்திற்கு குறைந்த விலை கார்களை அறிமுகப்படுத்துவது மிக முக்கியமான டிரெண்டாக இருக்கும் நிலையில், எலெக்ட்ரிக் செக்மெண்டிலும் குறைந்த விலை காரை அறிமுகப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கார் விற்பனைக்கு வருமா? வராதா? என்ற தகவல் இதுவரை எதுவும் தெரியவில்லை.
கார் வந்தாலும் வராவிட்டாலும் சுஸூகி நிறுவனம் ஜப்பான் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்திய இவி எக்ஸ் கார் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது. முற்றிலுமாக இந்தியாவிலேயே இந்த காரை தயாரித்து விற்பனைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. சுஸூகி நிறுவனம் இந்தியாவிலேயே எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர புதிய பிளாட்ஃபார்ம் ஒன்றை உருவாக்கி வருகிறது. அந்த பிளாட்பார்ம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட உடன் அடுத்தடுத்து எலெக்ட்ரிக் வாகனங்கள் அது தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும்.
அதன்படி, இடபிள்யூ எக்ஸ் என்ற கார் இந்தியாவில் 2026-27ஆம் ஆண்டிற்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரான இவிஎக்ஸ் என்ற கார் தற்போது ஒய்ஒய்8 என்ற கோடு பெயரில் தயார் செய்யப்பட்டு வருகிறது. இது 5 சீட்டர் கொண்ட காராகும். இந்த கார் விற்பனைக்கு வரும்போது ரூ.15 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இடபிள்யூ எக்ஸ் கார் இந்தியாவில் களமிறங்க வாய்ப்புள்ளதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளன. 2030ஆம் ஆண்டிற்கும் மாருதி நிறுவனம் 6 எலெக்ட்ரிக் காரர்களை இந்தியாவில் களம் இறக்க திட்டமிட்டுள்ளது. அதில் இவிஎக்ஸ், இடபுள்யூ எக்ஸ் கார் போக இன்னும் 4 கார்களை களமிறங்கும் என்று கூறப்படுகிறது. இந்த கார் 230 கிலோமீட்டர் வரை ஜெயித்து தரும் காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.