முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

“என்ன விட உனக்கு உன்னோட புருஷன் முக்கியமா?; தனியாக வீட்டில் இருந்த பெண்ணிற்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..

married-woman-was-killed-by-her-lover
07:40 PM Nov 26, 2024 IST | Saranya
Advertisement

துாத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள அகரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவருக்கு 31 வயதான தேவி என்ற மனைவியும், 14 வயதான நிர்மல் மற்றும் 13 வயதான இளமாறன் என்ற இரு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், நேற்று காலை தேவி, வழக்கம் போல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர்,  தேவியை கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பதட்டத்தில், அவர் தனது பைக்கை அங்கேயே விட்டு சென்றுள்ளார். இந்நிலையில், தேவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், சம்பவம் குறித்து ஏரல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. இதையடுத்து, போலீசார் ஏரல் அருகே உள்ள அகரம் பட்டுத்துறை கிராமத்தை சேர்ந்த 25 வயதான லிங்கராஜ் என்பவரை, ஒரு சில மணி நேரத்தில் கைது செய்தனர்.

Advertisement

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தேவி, சங்கரலிங்கத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் தேவி, லிங்கராஜ் என்பவருடன் நெருங்கி பழகியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சங்கரலிங்கம், பல முறை தேவியை கண்டித்துள்ளார். இதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், லிங்கராஜ் நேற்று வழக்கம் போல் தேவியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது தேவி, இனி தனது வீட்டிற்கு வர வேண்டாம் என கூறியுள்ளார். மேலும், தேவி சில நாட்களாக லிங்கராஜுடன் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது லிங்கராஜ், என்னை விட உனக்கு உன்னோட புருஷன் தான் முக்கியமா? என்ற ஆத்திரத்தில், தான் எடுத்து வந்த கத்தியால் தேவியை சரமாரியாக குத்தி, தப்பியோடி விட்டார். மேலும், அவர் விட்டு சென்ற பைக்கை வைத்து துப்பு துலங்கியதாக போலீசார் கூறியுள்ளனர்.

Read more: பள்ளி மாணவிகளிடம் அத்துமீறும் ஆசிரியர்கள்..!! இனி நடவடிக்கை வேற மாதிரி இருக்கும்..!! வெளியான பரபரப்பு உத்தரவு..!

Tags :
arelwoman
Advertisement
Next Article