For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"புருஷன் வேண்டாம், காதலன் மட்டும் போதும்"; பாச போராட்டம் நடத்திய மனைவி; இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

married woman was honor killed by her husband and brothers
07:30 PM Jan 04, 2025 IST | Saranya
 புருஷன் வேண்டாம்  காதலன் மட்டும் போதும்   பாச போராட்டம் நடத்திய மனைவி  இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
Advertisement

உத்தர பிரதேஷ் மாநிலம், பினாலி கிராமத்தை சேர்ந்தவர் நீரஜ் குமார். இவர், அதே பகுதியை சேர்ந்த சுமன் குமாரி என்பவரை காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களின் காதலுக்கு சுமன் குமாரியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அவரை ஹரியானாவை சேர்ந்த கிருஷ்ண யாதவ் என்பவருக்கு கடந்த வருடம் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு வந்த சுமன் குமாரி, தனது காதலன் நீரஜ் குமார் வீட்டிற்கு சென்று விட்டார்.

Advertisement

இதனால் அதிர்ச்சி அடைந்த சுமன் குமாரியின் குடும்பத்தினர், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் அவரது கணவர் வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்தனர். இதனால் நீரஜ் குமாரும் அவரது காதலியை திருப்பி அனுப்பி வைத்தார். பின்னர், சுமன் குமாரியின் வீட்டில் இருந்து அழுகுரல் கேட்பதாக நீரஜ் குமாருக்கு தகவல் வந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த நீரஜ் குமார், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற போலீசார் சுமன் குமாரியின் வீட்டிற்கு வந்த போது அவர் அங்கு இல்லை.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார்,வீட்டில் உள்ளவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சுமன் குமாரியை அவரது கணவர், சகோதரர் உள்ளிட்ட நான்கு பேர் சேர்ந்து கொலை செய்து புதைத்தது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் சுமன் குமாரியின் சடலத்தை மீட்டு நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

Read more: ”வேலியே பயிரை மேயலாமா?” புகார் அளிக்க வந்த பெண்ணை கழிவறைக்கு அழைத்து சென்று, டிஎஸ்பி செய்த காரியம்..

Tags :
Advertisement