For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

16 வயதில் திருமணம் செய்து குழந்தை..!! கணவரை விட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம்..!! பிரசவத்தின்போது நடந்த ட்விஸ்ட்..!!

Child marriage was concealed by giving a fake Aadhaar for delivery.
10:51 AM Jan 11, 2025 IST | Chella
16 வயதில் திருமணம் செய்து குழந்தை     கணவரை விட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம்     பிரசவத்தின்போது நடந்த ட்விஸ்ட்
Advertisement

சென்னை புளியந்தோப்பில் வசித்து வருபவர் 34 வயது பெண். இவருக்கு 16 வயதில் மகள் உள்ளார். இவர், பாரிமுனையில் செயல்படும் துணிக்கடையில் பணியாற்றி வந்தபோது, பிரகாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் காதலித்து வந்துள்ளார். இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து, ஓராண்டுக்கு முன்பு திருமணமும் செய்து கொண்டனர்.

Advertisement

தற்போது இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. பிரசவத்திற்கு போலியான ஆதார் கொடுத்து குழந்தை திருமணத்தை மறைத்துள்ளது. குழந்தை பிறந்த 6 மாதங்களில் தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துச் சென்றனர். இதையடுத்து, தாய் வீட்டில் தங்கியிருந்த சிறுமிக்கு ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

கள்ளக்காதல் ஜோடி சேர்ந்து வாழலாம் என முடிவெடுத்து சிறுமி சில நாட்களுக்கு முன் அவருடன் ஓட்டம் பிடித்தார். இதனால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், விசாரணையில் அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, பிரகாஷ், சிறுமியின் புதிய காதலன் சதீஷ் ஆகியோரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Read More : ”படத்திற்காக விஷாலின் கண்களை தைத்த பாலா”..!! ”சும்மா விட மாட்டோம்; கேஸ் போட போறோம்”..!! கொந்தளித்த நண்பர்

Tags :
Advertisement