”கணவனுடன் தாம்பத்தியம்..!! இதுவும் ஒரு வகையான கொடுமை தான்”..!! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!
கணவருடன் தாம்பத்தியத்துக்கு மனைவி மறுப்பதும் கொடுமை தான் எனக்கூறி இளைஞரின் விவாகரத்தை உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், இளம்பெண்ணுக்கும் கடந்த 2013 மே மாதம் 26ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த 3 நாளில் அந்த பெண் தனது தாயின் வீட்டுக்கு சென்றார். அதாவது, தேர்வுகள் எழுத வேண்டியுள்ளது எனக்கூறி இளம்பெண்ணை அவரது சகோதரர்கள் பிறந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். பிறகு தேர்வுகள் முடிந்தும் இளம்பெண் மீண்டும் கணவர் வீட்டுக்கு செல்லவில்லை.
இதையடுத்து, கணவரின் குடும்பத்தினர் இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்று அவரை அழைத்துள்ளனர். ஆனால், அவர் மறுத்துவிட்டார். அதுமட்டுமின்றி அந்த இளம்பெண் சார்பில் காவல் நிலையத்தில் கணவரின் குடும்பத்தினர் மீது வரதட்சணை புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இளம்பெண்ணை விவாகரத்து செய்ய புதுமாப்பிள்ளை முடிவு செய்தார். குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தார்.
அப்போது, ”திருமணமாகி 3 நாட்கள் மட்டுமே மனைவி எனது வீட்டில் இருந்தார். முதலிரவிலேயே என்னை பிடிக்கவில்லை. குடும்பத்தின் கட்டாயத்தால் தான் திருமணம் செய்ததாக கூறினார். இதனால் தாம்பத்திய உறவு எதுவும் வைத்து கொள்ளவில்லை” என்றார். மனைவி தரப்பில், ”தேர்வு இருந்ததால் தான் பிறந்த வீட்டுக்கு வந்தேன். ஆனால், அதனை சாதகமாக பயன்படுத்தி கணவரின் குடும்பத்தினர் அதிக வரதட்சணை கேட்டனர். இதனால், நான் எனது கணவரின் வீட்டில் வாழ விரும்பவில்லை” என்றார்.
இதை கேட்ட குடும்ப நல நீதிமன்றம், கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் புதுமண தம்பதிக்கு விவாகரத்து வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே தான், அந்த இளம்பெண் சார்பில் குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து தீர்ப்பை எதிர்த்து மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு வழக்கு ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த வேளையில் கணவர் தரப்பில், ”திருமணம் முடிந்த 3 நாளில் இருவருக்கும் இடையே தாம்பத்தியம் எதுவும் நடக்கவில்லை. தேர்வு எழுதுவதாக பிறந்த வீட்டுக்கு சென்றவர் மீண்டும் சேர்ந்த வாழ மறுத்துவிட்டார்”என்று வாதிடப்பட்டது. அதேபோல் இளம்பெண் சார்பிலும் தன் தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட ஐகோர்ட், “கணவருடன் தாம்பத்தியத்துக்கு மறுப்பது என்பதும் ஒரு வகையான கொடுமை தான். இதனால் சாத்னா நீதிமன்றம் வழங்கிய விவாகரத்தை மாற்றமின்றி உறுதி செய்கிறோம்” எனக்கூறி உத்தரவிட்டது.
Read More : மக்களே இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..? எத்தனை முறை UPI பரிவர்த்தனை செய்யலாம்..?