For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Marriage | திடீர் திருமணம்..!! சன் டிவி சீரியல் காதல் ஜோடியா இது..? குவியும் வாழ்த்து..!!

05:57 PM Mar 27, 2024 IST | Chella
marriage   திடீர் திருமணம்     சன் டிவி சீரியல் காதல் ஜோடியா இது    குவியும் வாழ்த்து
Advertisement

சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கேரக்டரில் நடித்து பிரபலமான நடிகர் அரவிஷ் இன்று சீரியல் நடிகை ஹரிகாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

Advertisement

நடிகை ஹரிகா சன் டிவியில் ஒளிபரப்பாகிய திருமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தவர்தான். ஹரிகா மற்றும் அரவிஷ் திருமணம் பெரியோர்களின் ஆசிர்வாதத்தோடு இரு வீட்டார் சம்மதத்தோடு நடைபெற்றிருந்த நிலையில், இவர்களுக்கு அதிகமான வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சின்னத்திரையில் ஒன்றாக நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. இது பல ஆண்டுகளாகவே பின்பற்றப்பட்டு வருகிறது தான். அதிலும் சமீப காலமாக ஒரே சீரியலில் நடிக்காத நடிகர்கள் கூட காதலித்து திருமணம் செய்து இருக்கின்றனர். அந்த வகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு ஷபானா மற்றும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆரம்பத்தில் செழியனாக நடித்து வந்து இப்போது ஜீ தமிழில் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் ஆர்யன் திருமணமும் நடைபெற்றது.

இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் காதலிக்கிறார்கள் என்ற செய்தி இணையத்தில் வெளியானதும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. காரணம் இருவரும் வெவ்வேறு சேனலில் வெவ்வேறு சீரியலில் நடித்துக் கொண்டிருந்தனர். ஆனால், இவர்களுக்குள் காதல் என்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது இவர்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அதே வரிசையில் மற்றொரு சின்னத்திரை பிரபலங்கள் சேர்ந்து இருக்கின்றனர். அதாவது சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கேரக்டரில் நடித்து பிரபலமான அரவிஷ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த திருமகள் சீரியலில் கதாநாயகி ஹரிகாவை காதலித்து இன்று திருமணமும் செய்திருக்கிறார்.

சுந்தரி சீரியலில் சுந்தரியின் அண்ணனாக இருந்து பல உதவிகளை செய்து கொண்டிருக்கும் அரவிஷ். சுந்தரி சீரியலின் முதல் பாகத்தை தொடர்ந்து 2-வது பாகத்திலும் நடித்து வருகிறார். கோவையைச் சேர்ந்த அரவிஷ் இப்போது இலக்கியா சீரியலிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தான், சில மாதங்களுக்கு முன்பு அரவிஷ் மற்றும் ஹரிகா காதல் விவாகாரம் இணையத்தில் ரசிகர்களுக்கு தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்தின்படி, இவர்கள் இருவருக்கும் எங்கேஜ்மென்ட் முடிவடைந்திருந்த நிலையில், இன்று திருமணம் முடிவடைந்து இருக்கிறது.

இவர்களுடைய திருமணத்திற்கு அதிகமான சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். திருமணம் முடிந்ததும் அரவிஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில், அரவிஷ் மற்றும் ஹரிகா இருவரும் மணகோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கிறது. தற்போது இவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Read More : ’நாடக காதல்களுக்கு முற்றுப்புள்ளி’..!! ’பெற்றோர் சம்மதத்துடன் மட்டுமே திருமணம்’..!! பாமக தேர்தல் அறிக்கை..!!

Advertisement