For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

திருமண உடையை கருப்பாக மாற்றிய சமந்தா.. காரணம் என்ன தெரியுமா? வெளியான வீடியோ

09:04 AM Apr 28, 2024 IST | shyamala
திருமண உடையை கருப்பாக மாற்றிய சமந்தா   காரணம் என்ன தெரியுமா  வெளியான வீடியோ
Advertisement

நடிகை சமந்தா, தனது திருமணத்தின்போது அணிந்திருந்த வெள்ளை நிற கவுனை, கருப்பு நிறத்தில் மாற்றியமைத்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் ரசிகர்களை கவர்ந்த ஜோடியாக இருந்தனர். தெலுங்கு திரைப்படங்களில் இணைந்து நடித்த இருவரும் காதல் வயப்பட்டதால், கடந்த 2017-ம் ஆண்டு பிரம்மாணடமாக திருமணம் செய்து கொண்டனர்.

Advertisement

அதன் பின்னர், கடந்த 2021ம் ஆண்டு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், விவாகரத்து பெற்றனர். இந்நிலையில், திருமணத்தின்போது, தான் அணிந்திருந்த வெள்ளை நிற ஆடையை தற்போது, கருப்பு நிறத்திற்கு சமந்தா மாற்றியுள்ளார்.

திருமணத்தின்போது கவுன் வடிவில் இருந்த ஆடையை தற்போது வேறு விதமாகவும் மாற்றியுள்ளார். இந்த ஆடை மாற்றம் தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பதிவிட்டுள்ளார்.

மேலும், தனது வாழ்க்கை முறையையும் பழக்க வழக்கங்களையும் மாற்ற மனப்பூர்வமாக தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஒன்றுதான் இது எனவும் சமந்தா குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு சிறிய மாற்றமும், தீர்க்கமான முடிவுகளும் முக்கியமானது எனவும் சமந்தா குறிப்பிட்டுள்ளார்.

‘மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்’ பட்டம் வென்ற 60 வயது அழகி!

Tags :
Advertisement