ஷாக்!. பெண்களின் திருமண வயது 9 ஆக குறைப்பு!. இந்த நாட்டின் சட்டத்திருத்த முடிவுக்கு உலக நாடுகள் கண்டனம்!
Iraq: ஈராக்கில் பெண்களின் திருமண வயதை குறைப்பதோடு, பெண்களின் உரிமைகளை கட்டுப்படுத்துவது குறித்தும் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
ஈராக்கில் பழமைவாத கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது. இந்த அரசால் முன்மொழியப்பட்ட மாற்றங்கள், இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் கடுமையான விளக்கங்களுடன் குடும்ப சட்டங்களை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. முன்மொழியப்பட்ட திருத்தங்களில் மிகவும் அதிர்ச்சியூட்டும் விதிகளில் ஒன்றாக, பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை ஒன்பதாக குறைப்பதாகும்.
விவாகரத்து, குழந்தை வழக்குரிமை மற்றும் சொத்துரிமை ஆகிய பெண்களின் உரிமைகளை கட்டுப்படுத்துவதோடு இணைந்து, இந்த நடவடிக்கை பெண்களின் உரிமை குழுக்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பரவலான கண்டனத்தைத் தூண்டியுள்ளது. ஈராக் அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை "அறைகுறையான உறவுகளிலிருந்து" இளம் பெண்களை பாதுகாக்க இதனை ஒரு வழிமுறையாக நியாயப்படுத்துகிறது.
இருப்பினும், எதிர்பாளர்கள் இந்த மாற்றங்கள் குழந்தை திருமணம், குடும்ப வன்முறை மற்றும் பாலின சமத்துவமின்மை உள்ளிட்ட ஏற்கனவே உள்ள சமூக பிரச்சினைகளை அதிகரிக்கும் என்று வாதிடுகின்றனர். UNICEF தரவுகளின்படி, குழந்தை திருமணம் ஏற்கனவே ஈராக்கில் ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினையாகும், 18 வயதிற்கு முன்பே 28% பெண்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்த பிரச்சனை மேலும் அதிகரிக்கும் என்று உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
Readmore: ஆரோக்கியமான கொழுப்புகள் 19 வகையான புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது..!! – ஆய்வில் தகவல்