For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"அடேங்கப்பா.. 19,400 கோடியா.? பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய மார்க் ஜுக்கர்பெர்க்.."! சொத்து மதிப்பில் 4 வது இடத்தில் மெட்டா நிறுவனம்.!

10:39 AM Feb 04, 2024 IST | 1newsnationuser4
 அடேங்கப்பா   19 400 கோடியா   பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய மார்க் ஜுக்கர்பெர்க்     சொத்து மதிப்பில் 4 வது இடத்தில் மெட்டா நிறுவனம்
Advertisement

அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் குழுமமான மெட்டா, தனது ஒரு நாள் பங்குச் சந்தையின் லாபமாக $164 பில்லியனை எட்டியது. வால் ஸ்ட்ரீட் வரலாற்றிலேயே இந்தத் தொகையை எட்டிய முதல் நிறுவனம் இதுவே ஆகும். இதனால் மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்கின், நிகர சொத்து மதிப்பு $165 பில்லியனை எட்டியுள்ளது. இது பில்கேட்ஸின் சொத்து மதிப்பை விட அதிகமாகும்.

Advertisement

கடந்த வியாழக்கிழமை, முகநூல் நிறுவனத்தின் 20ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, மெட்டா தனது காலாண்டு ஈவுத்தொகை ஷேர் ஒன்றுக்கு 50 செண்ட் என அறிவித்தது. மேலும் கூடுதலாக $50 பில்லியன் பங்குகளை மீண்டும் வாங்குவதற்கு அங்கீகாரமும் அளித்தது.

அடுத்த நாள் பங்குச்சந்தையின் மதிப்பில் $196 பில்லியனைத் தொட்டது. இதனால் மெட்டாவின் பங்குச்சந்தை வளர்ச்சி 20.3 சதவிகிதமாக உயர்ந்தது. மேலும் 2012ல் வால் ஸ்ட்ரீட் தொடங்கிய பின், தனது மூன்றாவது பெரிய அதிகரிப்பை பதிவு செய்தது. மெட்டா நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு தற்போது $1.22 டிரில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.

மெட்டா நிறுவனத்தின், சமீபத்திய பங்குச்சந்தை அதிகரிப்பு, அமேசான் நிறுவனம் வைத்திருந்த முந்தைய சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் மார்க் ஜூக்கர்பெர்க் $165 பில்லியன் நிகர மதிப்பைக் கொண்டு, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்சை விட செல்வந்தர் ஆகிறார். அதுமட்டுமின்றி, CNBC அறிக்கையின்படி, வருகிற மார்ச் மாதத்தில் ஜுக்கர்பெர்க் தனது முதல் ஈவுத்தொகையை செலுத்தும் போது $174 மில்லியன் பணத்தைப் பெறுவார்.

Tags :
Advertisement