உலகின் முதிய பெண்மணி 117 ஆவது வயதில் காலமானார்..!!
உலகின் முதிய பெண்மணி எனக் கருதப்பட்ட மரியா பிரான்யாஸ் மோரேரோ தனது 117 ஆவது வயதில் காலமானார். மரியா பிரான்யாஸ் மொரேரா என்ற பெண் மார்ச் 1907 இல் பிறந்தார். அமெரிக்காவில் பிறந்த இவர் கடந்த 20 ஆண்டுகளாக ஸ்பெயினில் உள்ள முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வந்தார். 2 உலக போர், கோவிட் பெருந்தொற்று என பலவற்றை சந்தித்த அவருக்கு, கடந்த 2023 ல் உலகின் முதிய பெண்மணி என்ற கின்னஸ் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் வெளியிட்ட பதிவில், மரியா பிரான்யாஸ் மோரேரோ வயது 117. எங்களை விட்டு பிரிந்துவிட்டார். அவர் விரும்பியபடியே தூக்கத்தில், அமைதியாகவும், நிம்மதியாகவும், வலியின்றி இறந்ததாக கேட்டலான் மொழியில் அவரது குடும்பத்தினர் பதிவிட்டுள்ளனர். மேலும், மரியாவின் அறிவுரை மற்றும் கருணைக்காக நாங்கள் எப்போதும் அவர்களை நினைவில் கொள்வோம் என்று குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
Read more ; “என்னால் முடிந்ததை நாட்டிற்கு செய்துவிட்டேன்..!!” – கண்கலங்கிய அதிபர் ஜோ பைடன்