புது மாப்பிள்ளை ஸ்பெஷலான மாப்பிள்ளை சம்பா அரிசியின் மகத்துவமும்.! மருத்துவ குணங்களும்.!
தமிழகத்திற்கென்று தனித்துவமான பல நெல் வகைகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது மாப்பிள்ளை சம்பா. இந்த அரிசிக்கு என்று பல மகத்துவங்கள் இருக்கிறது. இந்த அரிசிக்கு நீரினை தக்க வைத்துக் கொள்ளும் திறன் உண்டு. மேலும் மண் வளத்தை காப்பதிலும் மாப்பிள்ளை சம்பா அரிசி முக்கிய பங்கு வகிக்கிறது. சிகப்பு நிறத்தில் இருக்கக்கூடிய இந்த அரிசியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன.
பழங்காலத்தில் இளவட்ட கல்லை தூக்கி பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இந்தக் கல்லை தூக்குவதற்கு மாப்பிள்ளைகள் தயாராவதற்கு தேவையான சக்தியை இந்த அரிசி வழங்குவதால் இதற்கு மாப்பிள்ளை சம்பா அரிசி என்று பெயர் வந்தது. இவற்றில் இரும்பு சத்து, நார்ச்சத்து, மாங்கனிசு, வைட்டமின்கள் மற்றும் துத்தநாகம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இவற்றில் இருக்கக்கூடிய இரும்புச்சத்தின் காரணமாக ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்கிறது. மேலும் ரத்த சோகை வராமல் தடுக்கிறது.
இந்த அரிசியில் கிளை செமிக் இன்டெக்ஸ் அளவு குறைவு. எனவே இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. கார்போஹைட்ரேட் விரைவாக ரத்தத்தில் உறிஞ்சப்படுவதை தடுத்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. இந்த அரிசியில் இருக்கும் துத்தநாகசத்து ஆண்களின் ஆண்மை பலம் அதிகரிக்க உதவுகிறது. ஆண்மை குறைபாடு உடையவர்கள் இந்த அரிசியை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இவற்றில் இருக்கக்கூடிய புரதச்சத்து உடலை வலிமைப்படுத்துகிறது. இந்த அரிசி சிறந்த நோய் எதிர்ப்பு ஆற்றலையும் உடலுக்கு கொடுக்கிறது.