சொன்னா நம்பமாட்டீங்க.. இந்த காய்கறி-லாம் இந்தியாவை சேர்ந்தது இல்லையாம்..!! அப்ப எந்த ஊர்?
இந்திய உணவுகளை நினைக்கும் போது முதலில் நினைவிற்கு வருவது மசாலா பொருட்கள், மூலிகைகள் மற்றும் நற்பதமான காய்கறிகள் நிறைந்த உணவுகள் தான். ஆனால் நாம் தினமும் சாப்பிடும் பல காய்கறிகள் இந்தியாவை பூர்வீகமாக கொண்டது அல்ல என்பது தெரியுமா?
ஆம், இந்திய உணவுகளில் அவசியம் சேர்க்கப்படும் பல காய்கறிகள் உண்மையில் மற்ற நாடுகளை பூர்வீகமாக கொண்டவை. மேலும் அந்த காய்கறிகள் இந்தியாவிற்கு வருவதற்கு பின் ஒரு கதையும் உள்ளது. கீழே இந்தியர்களின் தினசரி உணவில் சேர்க்கப்படும் எந்த காய்கறிகள் இந்தியாவை சேர்ந்தது அல்ல மற்றும் எந்த நாட்டில் இருந்து வந்தது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன. அந்த காய்கறிகளை பார்த்தால், நிச்சயம் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
உருளை கிழங்கு
உருளை கிழங்கு இந்தியாவின் தவிர்க்க முடியாத உணவாகும். உருளைக்கிழங்கு வறுவல், உருளைக்கிழங்கு சிப்ஸ், ஃப்ரெஞ்சு பிரைஸ் என பல உருளைக்கிழங்கு உணவுகள் பலரின் ஃபேவரைட் உணவுகளாக உள்ளன. ஆனால் உருளை கிழங்கின் பூர்வீகம் இந்தியா இல்லை. தென் அமெரிக்காவின் ஆண்டிஸ் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட உருளைக்கிழங்கு உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள காய்கறியாக உள்ளது. இவைபோர்த்துகீசிய மாலுமிகளால் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டன.
பன்னீர்
இந்திய உணவு வகைகளில் பனீர் பிரதானமாக இருக்கிறது. பனீர் பட்டர் மசாலா, பனீர் 65, பனீர் ஃபிரைடு ரைஸ் என்ன பல உணவுகள் பிரபலமாக உள்ளன. புரோட்டீன் நிறைந்துள்ள பனீர் சைவ உணவுகள், தயிர் பாலில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பனீர் உண்மையில் பெர்சியாவில் உருவானது. இது பாரசீக மற்றும் ஆப்கானிய ஆட்சியாளர்களால் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது பனீர் உள்ளூர் உணவுகளுடன் ஒருங்கிணைந்ததாக மாறியது.
பப்பாளி
இந்தியாவின் பிரபலமான பழங்களில் ஒன்றாக கருதப்படும் பப்பாளி பல்வேறு ஊட்டச்சத்து நன்மைகளை கொண்டுள்ளது. வெப்ப மண்டல பழமான பப்பாளி தெற்கு மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. பப்பாளி பழங்களை சாலட் ஆகியவற்றில் கலந்தோ அல்லது தனியாகவோ சாப்பிடலாம். மேலும் பப்பாளி அரைத்து ஜூஸாகவும் குடிக்கலாம்.
10. ப்ராக்கோலி
காலிஃப்ளவர் போன்றே தோற்றத்தைக் கொண்ட, ஆனால் வித்தியாசமான சுவையைக் கொண்டுள்ள பச்சை நிற காய்கறிக தான் ப்ராக்கோலி. சமீப காலமாக தான் இந்த ப்ராக்கோலி மக்களால் அதிகம் விரும்பி உட்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ப்ராக்கோலியும் இந்தியாவை பூர்வீகமாக கொண்டது அல்ல.
அன்னாசிப்பழம்
இந்தியாவின் பிரபலமான பழங்களில் அன்னாசிப் பழமும் ஒன்று. இந்த பழம தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது, குறிப்பாக பிரேசில் மற்றும் பராகுவே ஆகிய நாடுகளில் அதிகம் பயிரிடப்படும்.. ஐரோப்பிய வர்த்தகர்கள் இதை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தினர், அன்னாசி பழத்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா தற்போது 5-வது இடத்தில் உள்ளது.
கேப்சிகம்
பெல் பெப்பர்ஸ் என்றும் அழைக்கப்படும், ஃபிரைடு ரைஸ், கிரேவி வகைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கேப்சிகம் மத்திய மற்றும் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. ஸ்பெயின் 1493 இல் அவற்றை பயிரிடத் தொடங்கியது, 16 ஆம் நூற்றாண்டில், கேப்சிகம் இந்தியாவிற்குள் நுழைந்தது.
ஜிலேபி
இந்தியாவின் பிரபலமான இனிப்பு வகைகளில் ஜிலேபி தவிர்க்க முடியாததாகும். மத்திய கிழக்கில் உருவானது இந்த இனிப்பு பாரசீக மற்றும் அரேபியர்கள் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது பலரின் ஃபேவரைட் இனிப்பு வகையாகவும் ஜிலேபி இருக்கிறது.
தக்காளி
இந்திய சமையலில் தக்காளி என்பது தவிர்க்க முடியாத பொருளாகும். பெரும்பாலான இந்திய உணவுகளில் தக்காளி பிரதான பொருளாக உள்ளது. ஆனால் தக்காளியின் பூர்வீகம் இந்தியா இல்லை. தென் அமெரிக்காவைச் சேர்ந்த தக்காளி போர்த்துகீசிய வணிகர்களால் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. உலகளவில் இன்று அதிகம் தக்காளி உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.
Read more ; Ayushman Bharat Yojana : முதியவர்கள் எந்தெந்த நோய்களுக்கு இலவச சிகிச்சை பெறலாம்? விண்ணப்பிப்பது எப்படி?