இதை தெரிஞ்சுக்கோங்க.! சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால்..
பொதுவாக நம் பலரது வீடுகளிலும் சின்ன வெங்காயத்தை சமையலுக்கு பயன்படுத்தி வருகிறோம். தென்னிந்திய சமையலில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு உணவு பொருட்களில் சின்ன வெங்காயமும் ஒன்று. ஆனால் இதன் மருத்துவகுணம் பலருக்கும் தெரியாமலேயே பயன்படுத்தி வருகிறோம்.
மேலும் ஒரு சில வீடுகளில் சின்ன வெங்காயம் தோல் நீக்கி சமைப்பது நேரம் எடுக்கும் என்பதால் இதை தவிர்த்து விடுகின்றனர். ஆனால் நம் உடலில் ஏற்படும் நோய்களுக்கு அருமருந்தாக சின்ன வெங்காயம் இருந்து வருகிறது. தற்போது இந்த சின்ன வெங்காயத்தில் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பதை குறித்து பார்க்கலாம்?
1. சின்ன வெங்காயத்தில் தோல் நீக்கி தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
2. காலையில் எழுந்ததும் டீ, காபி குடிக்காமல் வெறும் வயிற்றில் சின்ன வெங்காயத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் வயிற்று புண் குணமாகும்.
3. உடல் சூடு அதிகமுள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி அடையும்.
4. மன அழுத்தம், சோர்வு, பதட்டம் உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும்.
5. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சின்ன வெங்காயத்தை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள அதிகபடியான கொழுப்பு கரையும்.
6. சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றை போக்க சின்ன வெங்காயம் பெரிதும் உதவுகிறது.
7. எலும்புகளில் நீர் கோர்த்து மூட்டு வலி ஏற்படுவர்கள் சின்ன வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.