”பல வழக்குகள் நிலுவையில் உள்ளது”..!! ”ஜாமீனில் வெளிவந்த உடனே அமைச்சர் பதவி”..!! செந்தில் பாலாஜிக்கு வழக்கில் அதிரடி உத்தரவு..!!
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஓராண்டுக்கு மேல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, அண்மையில் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் ஜாமீனில் வந்ததும் ஓரிரு நாட்களில் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை எதிர்த்து வித்யாகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ”மனுதாரரின் குற்றச்சாட்டில் நியாயம் உள்ளது. பல வழக்குகள் நிலுவையில் உள்ள போது அமைச்சராக எப்படி பொறுப்பேற்க முடியும்..? நாங்கள் ஜாமீன் கொடுத்த அடுத்த நாளே நீங்கள் அமைச்சராக பொறுப்பேற்றது எந்த வகையில் நியாயமானது..? என்னதான் நடக்கிறது..?" என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு அமைச்சருக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க பயப்படுவார்கள். இந்த வழக்கில் விளக்கத்தை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய செந்தில் பாலாஜி தரப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையும் இருந்ததால் அமலாக்கத்துறையும் வழக்கில் உள்ளே நுழைந்தது. கடந்த 2023 ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இதைத் தொடர்ந்து அவர் வகித்த மின்சாரத் துறை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read More : ”வாங்கிய கடனை இப்படியெல்லாமா செலுத்துவீங்க”..? அதிர்ந்துபோன பைனான்சியர்..!! அழகிகளை காட்டி டீலிங்..!!!