முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மனிதனின் முதல் மொழி!. இன்று சர்வதேச சைகை மொழி தினம்!. வரலாறு, முக்கியத்துவம் இதோ!.

International Sign Language Day
05:50 AM Sep 23, 2024 IST | Kokila
Advertisement

International Sign Language Day: உலகில் பல ஆயிரம் மொழிகள் உள்ளன. அவற்றில் நூற்றுக்கும் குறைவான மொழிகளே உலகில் பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது. ஏராளமான மொழிகள் எழுத்துகள் இல்லாமலும் அதிகமாகப் பேசப்படாமலும் அழிந்து வருகின்றன. உலகில் பழமையான மொழி எது என்பது பற்றி வரலாற்று ஆய்வாளர்களால் தெளிவான முடிவு எதையும் சொல்ல முடியவில்லை. ஆனால் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் உள்ள மொழிகளைவிட மூத்த மொழி மனிதனின் சைகை மொழியே. சைகையால் பேசிய பிறகுதான் வடிவ எழுத்துகள் தோன்றின. அதன் பின்னரே மொழிகள் வளர்ந்தன. ஆக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியான சைகை மொழி பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?

Advertisement

இன்றும் நமக்கு எத்தனை மொழிகள் தெரிந்தாலும், அந்த மொழிகளை அறியாத ஊருக்குச் சென்றால் நாம் சைகை மொழியில்தான் பேச வேண்டும். சைகை மொழி நமக்குள் மறைந்து கிடக்கிறது. நமது பேச்சு மற்றவர் களுக்கு புரியாவிட்டாலோ அல்லது அவர்கள் பேசுவது நமக்கு புரியவில்லை என்றாலோ நம்மை அறியாமலே நமது கைகள் சைகை மொழியை பயன்படுத்த ஆரம்பித்துவிடும். உலக அளவில் பொதுவான சைகை குறியீடுகள் உள்ளன. உணவு, நீர், வழிகேட்டல் போன்ற அடிப்படைகளுக்கான சைகை குறியீடுகள் ஒன்று போலவே இருக்கின்றன. பெரும்பாலான சைகை மொழியில் ஒத்துப்போகின்றன.

உலகில் பல்வேறு மொழிகள் உள்ளன. இதை போன்றே, சைகை மொழிகளிலும் இந்திய சைகை மொழி, அமெரிக்க சைகை மொழி, பிரிட்டிஷ் சைகை மொழி என பல உள்ளன. இந்திய சைகை மொழியை கொண்டு, இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள காது கேளாத மற்றும் பேசும் திறனற்ற மக்களும், எளிமையாக தங்களது தேவைகளை வெளிப்படுத்த முடிவதாக, ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனசர்வதேச சைகை மொழிகளின் தினமானது, உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும், செப்., 23 அன்று, சர்வதேச காது கேளாதோர் வாரத்துடன் இணைந்து கொண்டாடப்படுகிறது. சைகை மொழியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

சைகை மொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால், காது கேளாதோர் மற்றும் பேசும் திறனற்றோரின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு துணை புரியும் என்பது இந்நாளில் வலியுறுத்தப்படுகிறது. 1951ம் ஆண்டில், உலக காது கேளாதோர் கூட்டமைப்பு நிறுவப்பட்ட நிலையில் முதன்முதலில் 2018ல் சர்வதேச சைகை மொழிகள் தினம் அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்பட்டது.

உலக காது கேளாதோர் அமைப்பு சுமார் 7 கோடி மக்கள் காது கேளாத தன்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறது. அவர்கள் சைகை மொழியில்தான் தகவல் தொடர்பு செய்கிறார்கள். அவர்கள் சைகையால்தான் பெரும் பாலான உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு மொழிக்கும் ஒரு வரலாறு இருக்கும். சைகை மொழிக்கும் வரலாறும், சுவையான பின்னணியும் உண்டு.

சைகை மொழி என்பது வெறும் கைகளால் பேசப்படுவதல்ல. முக பாவனை, கை அசைவு, உடல் அசைவு, வடிவ பாவனை ஆகியவற்றின் மூலம் முழுமையான சைகை மொழி பேசப்படுகிறது. சைகை மொழிக்கும் இலக்கணம் உண்டு. சரியான சைகையும், இமை-உடல் அசைவுமே கேள்வி பதிலை புரிய வைக்கின்றன. சைகை மொழியில் புருவ அசைவு முக்கியத்துவமானது. யார்? என்ன? எங்கே, ஏன்? என்பது போன்ற கேள்வி களுக்கு புருவம் கீழ்நோக்கி இறக் கப்பட வேண்டும். ஆம் அல்லது இல்லை என்பதை தெரிவிக்கும் சூழலில் புருவம் மேல்நோக்கி செல்ல வேண்டும்.

மூளையில் பாதிப்பு ஏற்பட்டவர்களாலும் சைகை மொழியை புரிந்து கொள்ளவும், சைகை மொழியில் பேசவும் முடியும். ஆனால் அவர்கள் சைகை மொழிக்கான இலக்கணத் தன்மையுடன் பேச மாட்டார்கள். அமெரிக்க சைகை மொழியில் ஆங்கில எழுத்துகள் ஒரு கையினால் காண்பிக்கப்படுகிறது. ஜெர்மன் மற்றும் இங்கிலாந்து சைகை மொழிகளில் இரு கைகளால் ஆங்கில எழுத்துகள் உணர்த்தப்படுகின்றன.

பெண் மற்றும் பெண் தொடர்பான சைகைகள் தாடையின் அருகில் கைகளைக் கொண்டு செய்து காண்பிக்கப்படுகின்றன. ஆண் தொடர்பான சைகைளை குறிக்க நெற்றியின் அருகே கைகளைக் கொண்டு சைகை செய்யப்படுகிறது. காது கேளாதவர்கள் யாரிடமாவது உங்கள் பெயரை தெரிவிக்க வேண்டுமென்றால் ஆங்கில எழுத்துகளின் வடிவத்தை உங்கள் கைகளால் குவித்து ஒவ்வொரு எழுத்தாக செய்து காண்பித்தால் புரிந்து கொள்வார்கள். நீங்கள் அவர்களது பெயரை கேட்டாலும் அப்படியே சைகையால் எழுதிக் காண்பிப்பார்கள்.

சைகை மொழியில் ஒவ்வொரு சைகைக்கும் 5 கூறுகள் உண்டு. அவற்றை மாற்றிக் காண்பித்தால் முழு அர்த்தமும் மாறிவிடும். உள்ளங்கையின் உதவியால் திசைகளை கூறுவார்கள். ஒரே சைகையை இரு அசைவுகளாக காண்பிப்பது இரு வேறு அர்த்தங்களை குறிக்கும்.

Readmore: iOS, iPadOS மற்றும் macOS பயனர்களுக்கு பாதுகாப்பு சிக்கல்? அலர்ட் கொடுக்கும் மத்திய அரசு..!!

Tags :
International Sign Language Day
Advertisement
Next Article