முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Manohar Lal Khattar | முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மனோகர் லால் கட்டார்..!! அமைச்சரவையும் கலைப்பு..!!

01:21 PM Mar 12, 2024 IST | 1newsnationuser6
Advertisement

ஹரியானாவில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. எனினும், கூட்டணி கட்சிகளின் உதவியுடனேயே அரசு நடந்து வரும் சூழலில், அதில் அங்கம் வகிக்கும் ஜனநாயக ஜனதா கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு காணப்பட்டது. ஜனநாயக ஜனதா கட்சியின் சார்பில் துணை முதல்வராக உள்ள துஷ்யந்த் சவுதாலாவுக்கும், பாஜகவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. மக்களவை தேர்தலில் தொகுதி பகிர்வில் உடன்பாடு ஏற்படாத சூழலில், இந்த மோதல் முற்றியது.

Advertisement

இந்நிலையில், பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் சுயேச்சை எம்.எல்.ஏ.வான நயன் பால் ரவாத் இன்று கூறும்போது, கூட்டணி முறிவுக்கான சாத்தியம் காணப்படுகிறது. எனினும், சில சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் கட்டாருக்கும், அரசுக்கும் ஆதரவு தருவார்கள் என கூறினார். பா.ஜ.க.வுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி முறித்து கொள்ள உள்ளது என வெளியான தகவலை முன்னட்டு ஹரியானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையொட்டி, தருண் சக் மற்றும் அர்ஜுன் முண்டா உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஹரியானாவுக்கு விரைந்துள்ளனர். அக்கட்சியின் சட்டமன்ற கட்சி கூட்டமும் இன்று நடைபெற கூடும் என கூறப்பட்டது. இந்த சூழலில், ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்துள்ளார். அவர் தன்னுடைய மந்திரி சபையை சேர்ந்த சகாக்களுடன் சென்று கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயாவிடம் அதற்கான கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார். உடனடியாக அவரது மந்திரிகள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். இதனால், அமைச்சரவை கலைக்கப்பட்டு உள்ளது. அடுத்து அரியானா முதல்-மந்திரியாக பதவியேற்பது யார்? என்ற பரபரப்பு காணப்படுகிறது.

Read More : Rameshwaram Cafe | ஆன்லைன் மூலம் ஆர்டர் பெற்ற குற்றவாளி..!! ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் திடுக்கிடும் தகவல்..!!

Advertisement
Next Article