’மது குடிச்சதால மணிவண்ணன் இறக்கல’..!! ’காரணமே வேற’..!! உண்மையை உடைத்த சகோதரி..!!
1980ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதியவர் மணிவண்ணன். கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து, இளமை காலங்கள், 100-வது நாள், 24 மணி நேரம், முதல் வசந்தம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த இவரின் அமைதிப்படை திரைப்படம் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. இயக்குனராக மட்டுமின்றி, வில்லன், நகைச்சுவை மற்றும் குணச்சித்திரம் கதாபாத்திரங்களில் நடித்து கலக்கியுள்ளார்.
இதற்கிடையே, அதிகமான குடிக்கபழக்கம் காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அண்மையில் அவரது தங்கை அளித்துள்ள பேட்டி ஒன்றில், அண்ணன் லிவர் ப்ராபளம் வந்த உடனே குடிப்பதை நிறுத்திவிட்டார். அவர் குடியால் இறந்துவிட்டார் என்பது பொய்யான தகவல். அண்ணிக்கு 2004iல் கேன்சர் நோய் இருப்பது தெரியவந்துள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் இறந்துவிடுவார் என்று மருத்துவர்கள் அண்ணாவிடம் மட்டும் சொல்லியிருக்கிறார்கள்.
அண்ணி இல்லாத வாழ்க்கையை அவரால் நினைத்து பார்க்க முடியவில்லை. அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் இறப்பதற்கு 2 வாரங்களுக்கு முன்பு கூட சேரில் இருந்து விழுந்துவிட்டார். அப்போது அவரது உடலை அனைத்து செக் செய்து பார்த்தோம் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை. திடீரென அவரது மரணம் நிகழ்ந்துவிட்டது. அவர் இறந்த 2 மாதங்களில் அண்ணியும் இறந்துவிட்டார். அந்த ஆண்டு மார்ச் மாதம் அவரது மகனுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது இருவருமே இருந்தார்கள். ஆனால் திருமணத்தின்போது இல்லை” என்று வேதனையுடன் கூறியுள்ளார்.