For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இங்க நான் தான் ஆங்கர்.. நீ இல்ல.. உன் வேலைய மட்டும் பாரு..!! குக் வித் கோமாளி ஷோவை தூக்கி எறிந்த மணிமேகலை.. என்ன நடந்துச்சு?

Manimegala's announcement that she is quitting Vijay TV's Cook with Komali show
10:52 AM Sep 15, 2024 IST | Mari Thangam
இங்க நான் தான் ஆங்கர்   நீ இல்ல   உன் வேலைய மட்டும் பாரு     குக் வித் கோமாளி ஷோவை தூக்கி எறிந்த மணிமேகலை   என்ன நடந்துச்சு
Advertisement

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று தற்போது தொகுப்பாளினியாக மாறியுள்ள வி.ஜே.மணிமேகலை தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக வெளியிட்டுள்ள அறிப்பு சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளிலேயே குக் வித் கோமாளி சீசன் தான் மன அழுத்தத்தை குறைக்கும் அளவிற்கு மக்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக பெயர் வாங்கி இருக்கிறது. ஆனால் இந்த ஆண்டு துவங்கிய சீசன் 5 ஆரம்பமே ஆட்டம் கழண்டு போச்சு. ஜட்ஜ் ஆக வந்த வெங்கட் பட் மற்றும் சில போட்டியாளர்கள் இதிலிருந்து விலகி விட்டார்கள். சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பொறுப்பை ரக்சன் மற்றும் மணிமேகலை எடுத்து நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக மணிமேகலை கூறியது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,  குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான் இல்லை. மிகுந்த, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் நான் எப்பொழுதும் எனது 100% முயற்சிகளையும் கடின உழைப்பையும் கொடுக்கிறேன். 2019 நவம்பரில் இருந்து குக் வித் கோமாளி என்ற ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சியின் பயணம் தொடங்கியது. அன்றில் இருந்து இதே நிலை தான் இருக்கிறது. ஆனால் சுய மரியாதையை விட முக்கியமானது எதுவுமில்லை!

என் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் நான் அதைக் கண்டிப்பாகப் பின்பற்றுகிறேன். புகழ், பணம், தொழில், வாய்ப்புகள் அல்லது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. சுய மரியாதை என்று வரும்போது எல்லாமே இரண்டாம் பட்சம்தான். அதனால் நான் இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டேன். இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்தினார்.

ஐந்தாவது சீசன் தொடங்கிய முதல் நாளிலிருந்து நான் விலகிய நாள் வரைக்கும் இந்த நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொண்ட ஒரு பெண் தொகுப்பாளர் தனக்கு தான் எல்லாமே தெரியும், தான் பல வருடங்களாக இந்த சேனலில் வேலை பார்க்கிறேன். தான் பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டு என்னை வேலை பார்க்க விடாமல் தடுக்கிறார்.

இது குறித்து நான் சேனல் தரப்பிடமும் நிகழ்ச்சி தயாரிப்புக்கு தரப்பினரிடமும் சொல்லிவிட்டேன். ஆனால் அவர்கள் அதற்கு சரியான ஆக்சன் எடுக்கவில்லை. அவர்கள் நாம் இது பற்றி சொன்னால் ஒரு மாதிரி பேசுகிறார்கள். அதனால் நான் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்து விட வேண்டும் என்று முடிவு எடுத்தேன். நமக்கு சுயமரியாதை தான் ரொம்ப முக்கியம்.

ஆனால் நான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறேன் என்று வெளியே சொன்னதை தவறு என்று நிகழ்ச்சியில் என்னை அந்த தொகுப்பாளரிடம் மன்னிப்பு கேட்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொடர சொன்னார்கள். அப்படி மன்னிப்பு கேட்டால் உங்களுக்கு இன்னும் சில நிகழ்ச்சிகள் தருகிறோம் என்று சொன்னார்கள். எனக்கு என்னுடைய தன்மானத்தையும், சுய கௌரவத்தையும் விட்டு நான் எந்த தவறும் செய்யாமல் இறங்கி போய் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு அந்த நிகழ்ச்சிகள் தொடர வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.

நான் ஆரம்பத்தில் இருந்தே எந்த பின்புலமும் இல்லாமல் கஷ்டப்பட்டு தான் என்னுடைய பயணத்தை தொடங்கினேன். அதனால் தைரியமாக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்து விட வேண்டும் என்று முடிவெடுத்தேன். இதுவரைக்கும் நான் நான்கு சீசன்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். ஆனால் அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் இதுபோல இல்லை. இந்த ஐந்தாவது சீசன் மொத்த குழுவினர்களும் வேறு மாதிரியான எண்ணங்களோடு இருக்கிறார்கள். அவர்களோடு என்னுடைய வேலையை இனி என்னால் தொடங்க இயலாது என்று அந்த வீடியோவில் மணிமேகலை பேசியிருக்கிறார்.

Read more : பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கான அடிப்படை விலையை நீக்க மத்திய அரசு முடிவு…!

Tags :
Advertisement