குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட மாம்பழ கேள்வி..!! உங்களுக்கு விடை தெரிஞ்சா கமெண்ட் பண்ணுங்க..!!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட மாம்பழம் தொடர்பான கேள்வி ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்குத்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை டிஎன்பிஎஸ்சி தேர்வு நடந்தது. இந்நிலையில் தான், அந்த தேர்வில் கேட்கப்பட்ட மாம்பழம் தொடர்பான கேள்வி ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
அதாவது, ஒரு புத்திசாலி மனிதன் மூட்டைக்கு 30 மாம்பழங்கள் வீதம் 3 மூட்டைகள் எடுத்துச் செல்கிறான். ஒவ்வொரு சுங்கச் சாவடியைத் தாண்டும் பொழுதும் மூட்டைக்கு 1 மாம்பழம் தர வேண்டும். 30 சுங்கச் சாவடிகளைத் தாண்டும் பொழுது 'அவனிடம் எத்தனை மாம்பழங்கள் மீதம் இருக்கும்?
(A) 0
(C) 20
(E) விடை தெரியவில்லை
(B) 10
(D) 25
என்று கேள்வி கேட்கப்பட்டது. உங்களால் இந்த கேள்விக்கு பதில் அளிக்க முடிகிறதா என்று பாருங்கள்.
இந்த கேள்விக்கான பதில் ஜீரோ என்று சிலர் சொல்லலாம். ஒரு டோல் கேட்டிற்கு 3 மாம்பழம் என்றால் 30 டோல் கேட்டிற்கு 90 மாம்பழம். மூன்று வாகனங்களில் உள்ள மொத்த மாம்பழம் 90. அதனால் கடைசியில் இருப்பது என்னவோ 90-90 = ஜீரோ மாம்பழங்கள்.
ஆனால் இங்கே கேள்வியில் ஓட்டுநர் புத்திசாலியான நபர் என்று கூறப்பட்டுள்ளது. முதலில் உள்ள 10 செக் போஸ்டில் மூட்டைக்கு ஒன்று என்று 3 மூட்டைக்கு மாம்பழம் கொடுத்தால். 10 செக் போஸ்ட் முடிய 30 மாம்பழங்கள் காலியாகும். மீதம் மூட்டைக்கு 20 மாம்பழங்கள் இருக்கும். 3 மூட்டைக்கு தலா 20 மாம்பழங்கள் என்று 60 மாம்பழம் இருக்கும். இதை 2 மூட்டையாக பிரித்து ஒரு மூட்டைக்கு 30 என்று டிரைவர் மாற்றி வைக்கலாம்.
பின்னர், அடுத்த 15 செக் போஸ்டில் இரண்டு மூட்டையில் இருந்து தலா 1 மாம்பழம் கொடுத்தால், ஒரு மூட்டைக்கு 15 மாம்பழம் என்று 2 மூட்டைக்கு 30 மாம்பழம் போக மீதம் 30 மாம்பழம் இருக்கும். அதை ஒரு மூட்டையில் போட்டு அடுத்த 5 செக் போஸ்ட்டில் 5 மாம்பழங்கள் கொடுத்தால் மீதம் 25 மாம்பழம் இருக்கும். எனவே சரியான விடை 25 மாம்பழங்கள்.
Read More : தனிமையில் தவித்த பெண்ணின் வீட்டிற்கு திடீரென வந்த இன்ஸ்டா நட்பு..!! மயக்கம் + ஓட்டம்..!! நடந்தது என்ன..?