அனிதா மீது ஆசைப்பட்ட மேலாளர்..!! புதருக்குள் சடலமாக கிடந்த 6 வயது சிறுவன்..!! திருப்பூரில் ஷாக்..!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காரணம்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான நூற்பாலை எனப்படும் ஸ்பின்னிங் மில் செயல்பட்டு வருகிறது. இந்த மில்லில் ஒடிசாவைச் சேர்ந்த கரண் தாஸ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். மேலும் அங்கு அனிதா நாயக் என்ற பெண்ணும் வேலை பார்த்து வருகிறார். இந்த பெண்ணுக்கு ஏற்கனவே 2 முறை திருமணமான நிலையில், 6 வயதில் மகன் ஒருவரும் உள்ளார். எனவே, தனது மகனுடன் அருகில் உள்ள குடியிருப்பில் அனிதா நாயக் வசித்து வந்துள்ளார்.
இதற்கிடையே, கரண் தாஸுக்கும், அனிதா நாயக்கிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கத்திற்கு இடையே சுரேஷ் என்ற ஒரு நபர் உள்ளே வந்துள்ளார். அவரும் அந்த நூற்பாலையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சுரேஷுக்கும் அனிதா நாயகத்திற்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதையறிந்த கரண் தாஸ், பலமுறை இதனை கைவிடுமாறு அனிதாவிடம் கூறியுள்ளார். ஆனால், அதற்கு அனிதா சம்மதிக்கவில்லை.
இதனால் விரக்தி அடைந்த கரண் தாஸ், மதுபோதையில் நூற்பாலைக்கும் வந்துள்ளார். எனவே, அவரை தற்காலிகமாக மில்லில் இருந்து நீக்கம் செய்துள்ளனர். அதேநேரம், சுரேஷுக்கு மேலாளர் பதவியும் கொடுத்துள்ளனர். ஆனால், மேற்பார்வையாளராக இருந்து வரும் கரண் தாஸ் தான் அடுத்ததாக அந்த நூற்பாலையில் மேலாளராக வர வேண்டியவர். எனவே, தனது மேலாளர் பதவியும் பறிகொடுத்த கரண் தாஸ், எப்படியாவது அந்த மேலாளர் பதவியையும், அனிதாவையும் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக அனிதாவின் 6 வயது மகனைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் சென்ற கரண் தாஸ், அந்த சிறுவனை அழைத்து அருகில் உள்ள புதருக்குள் வந்துள்ளார். அங்கு சிறுவனின் கழுத்தை துண்டால் இறுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், அதே இடத்தில் சிறுவனை மறைத்து வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து, தனது மகன் காணாமல் போனதை அறிந்த அவரது தாய் அனிதா, தேடிப் பார்த்துள்ளார்.
ஆனால் மகன் கிடைக்காததால், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், தான் புதருக்குள் ஒரு சிறுவனின் உடல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அச்சிறுவன் அனிதா நாயக்கின் மகன் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில் தான், கரண் தாஸின் இந்தக் கொலை திட்டம் தெரியவந்துள்ளது. பின்னர், தலைமறைவாக இருந்த கரண் தாஸை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.