முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

6 வருஷம்... 6 மனைவி.! கேரளா முதல் விழுப்புரம் வரை.! பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன்.! காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை.!

08:29 PM Dec 31, 2023 IST | 1newsnationuser4
Advertisement

திருப்பூரைச் சேர்ந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் 6 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பிளேபாயை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது சிவகங்கை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை திருமணம் செய்ய திட்டம் தீட்டியது அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

Advertisement

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தேவி என்ற பெண் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்த நிலையில் குணசேகரன் என்ற வாலிபரை இரண்டாவதாக திருமணம் செய்து இருக்கிறார் . இந்நிலையில் தனது கணவரின் நடவடிக்கைகளில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கணவரிடம் விசாரித்த போது இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டு தேவியை விட்டு பிரிந்து சென்று இருக்கிறார் குணசேகரன்.

இதனைத் தொடர்ந்து குணசேகரன் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியளிக்கும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது. தேவிக்கு முன்னதாக குணசேகரன் 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இவர் கேரளாவை சேர்ந்த வனிதா என்ற பெண்ணை முதலாவதாக திருமணம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு திருப்பூரைச் சேர்ந்த கனகா என்ற பெண்ணையும் 2019 ஆம் வருடம் கோயம்புத்தூர் சேர்ந்த செல்லம்மாள் என்பவரையும் திருமணம் செய்துள்ளார். இதன் பிறகு விழுப்புரத்தைச் சேர்ந்த சசிகலா காளீஸ்வரி என இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ளார். இதன் பிறகு தேவியை திருமணம் செய்து இருக்கிறார். தற்போது சிவகங்கையை சேர்ந்த கல்லூரி பெண் ஒருவரை திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில் இவரைப் பற்றிய உண்மை சம்பவங்கள் காவல்துறை மூலம் வெளியாகி இருப்பதால் தலைமறைவாகி இருக்கிறார். இந்த பிளேபாயை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags :
6 marriage in 6 yearscheatingPlayboypolice searchingtirupur
Advertisement
Next Article