ஆந்திரா: செல்ஃபி எடுக்க முயன்ற நபரை கடித்து குதறிய சிங்கம்.! வன உயிரியல் பூங்காவில் நடந்த துயர சம்பவம்.!
ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதியில் உள்ள வனவிலங்கியல் பூங்காவில் சிங்கத்தின் அருகே சென்று செல்ஃபி எடுக்க முயன்ற நபர் சிங்கத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்காவில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்று உள்ளது. இறந்த நபர் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள பன்சூர் நகராட்சியில் வசிக்கும் 34 வயதான பிரஹலாத் குஜ்ஜார் என அடையாளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உங்களுக்கு காட்சி சாலைக்கு சென்ற அந்த நபர் பாதுகாப்பு வளையங்களையும் தாண்டி சிங்கத்தின் அருகே சென்று செல்ஃபி எடுக்கும் நோக்கத்துடன் நுழைந்தபோது சிங்கத்தின் தாக்குதலுக்கு பலியானதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இறந்த நபர் பணியில் இருந்த கண்காணிப்பு அதிகாரிகளின் பயிற்சியும் மீறி பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த 6 அடி சுவரைத் தாண்டி குதித்து சிங்கத்தின் அருகில் புகைப்படம் எடுக்க சென்றதாக பணியில் இருந்த கண்காணிப்பு அதிகாரி சி.செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் சிங்கம் அவரின் உடல் பாகங்கள் எதையும் சாப்பிடவில்லை எனவும் தெரிவித்தார். அவரது கழுத்தில் சிங்கம் தாக்கிய தடங்கள் இருந்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
துரதிஷ்டவசமாக பராமரிப்பாளர் சென்று காப்பாற்றுவதற்கு முன் 'டோங்கல்பூர்' என்ற சிங்கம் அந்த இளைஞரை கொன்றுவிட்டது. தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த இளைஞர் குடிபோதையில் இருந்தாரா என்பது பிரேத பரிசோதனையில் தெரியவரும் எனவும் காவல்துறை தரப்பு கூடியிருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து சிங்கம் கூண்டுக்குள் அடைக்கப்பட்டுள்ளது.